ETV Bharat / state

நீச்சல் குளத்தில் சிறுவன் மரணம்... கதறியழுத தந்தை.. அலட்சியம் காரணமா?

சென்னை பெரியமேட்டில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் மரணமடைந்த நிலையில், இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 5, 2023, 12:19 PM IST

Updated : Apr 5, 2023, 2:43 PM IST

சென்னை: பெரியமேட்டில் இயங்கி வரும் மை லேடி (My Lady) என்ற நீச்சல் பயிற்சி குளத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சென்னை பெரியமேடு போலீசார் அளித்த தகவலின்படி, கொசப்பேட்டை, பட்டாளம் ஹாஜி முகமது அப்பாஸ் தெருவை சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. இவரது 7வயது மகன் தேஜஸ் குப்தா வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதற்காக பெரியமேடு பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் சேர்த்து விட்டுள்ளனர். நேற்று மாலை வழக்கம் போல சிறுவனின் தாத்தா சசிக்குமார் மற்றும் தந்தை ராகேஷ் சிறுவனை நீச்சல் பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது பயிற்சியாளர் செந்தில் மற்றும் சுமன் ஆகியோர் 4அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் 15 குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பிளாஸ்டிக் லேடரை பிடித்து கொண்டிருந்த சிறுவன் தேஜா குப்தா எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதாக தெரிகிறது.

மயங்கிய பின்னரே சிறுவனைக் கண்டறிந்த பயிற்சியாளர் செந்தில் உடனடியாக மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனின் தாத்தா சசிக்குமார், எப்போதுமே நீச்சல் குளத்தின் வெளியே தான் காத்திருக்கச் சொல்வார்கள் என்றும், அப்படி தான் காத்திருக்கும் போதுதான் விபத்து ஏற்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

இதே போன்று சிறுவனின் தந்தை ராகேஷ் குப்தா பேசுகையில், எனது மகன் கடந்த 13 நாட்களாக மை லேடி நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறான். எப்போதுமே 2 பயிற்சியாளர்கள் தண்ணீருக்குள்ளும், 2 பேர் மேலே நின்று கண்காணிப்பிலும் ஈடுபடுவார்கள் என கூறினார்.

இருந்தாலும் குழந்தையின் பாதுகாப்புக்காக குழந்தையின் அருகே நிற்போம் என்றும், ஆனால் நேற்று பயிற்சியாளர்கள் தன்னை தள்ளி நிற்குமாறு கூறியதாகவும் தெரிவித்தார். தண்ணீரில் இருந்த குழந்தைகள் ஜம்பிங்குக்காக வெளியே வரச்சொன்னார்கள். ஆனால் என் பையன் மட்டும் வெளியே வரவில்லை என்பதை தூரத்தில் இருந்தே கவனித்தேன் என கூறும், ராகேஷ் என் மகன் இல்லையே என கோச்சிடம் கேட்டு கத்தினேன் என்றார்.

ஆனால் பயிற்சியாளர்கள் சிறுவன் பாத்ரூம் சென்றிருப்பதாக கூறியதாகவும், ஆண்கள் கழிவறைக்கும், பெண்கள் கழிவறைக்கும் தன்னை அலைக்கழித்ததாக கூறியுள்ளார். ஆனால் இதற்குள் தண்ணீருக்குள் மூழ்கியிருந்த சிறுவனை பயிற்சியாளர்கள் சடலமாகத்தான் மீட்டனர் என கூறியுள்ளார். தான் மகனை தேடும் வரையிலும் பயிற்சியாளர்கள் கவனிக்கவில்லை என கூறிய தந்தை அழுது கதறும் வரை, அவர்கள் பொறுமையாகத்தான் இருந்தனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' பட பாணியில் பலே திருட்டு.. ஆந்திர கும்பலை அள்ளிய வேலூர் போலீஸ்!

Last Updated : Apr 5, 2023, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.