ETV Bharat / state

வங்கிகளால் நியமிக்கப்பட்ட முகவர்களின் தொல்லையால் கடன் வாங்கியவர் தற்கொலை! - கடன் வாக்கிய பணத்தை கேட்டு தொல்லை

சென்னை: வங்கிகளால் நியமிக்கப்பட்ட முகவர்கள் கடன் வாங்கிய பணத்தைக் கேட்டு தொல்லை செய்ததால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலைசெய்துகொண்டார்.

கடன் வாங்கியவர் தற்கொலை
கடன் வாங்கியவர் தற்கொலை
author img

By

Published : Jan 8, 2021, 9:21 PM IST

சென்னை பெரவள்ளுர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜவஹர் நகர் முதல் சர்குலர் சாலையில் வசித்துவந்தவர் வசந்தகுமார் (59). இவரது மனைவி சுரேகா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் திருமணமாகி தனியாக வசித்துவருகின்றார்.

வசந்தகுமார், சுரேகா திருமணமான தனது மகனுடன் ஒன்றாக வசித்துவந்தார். வசந்தகுமார் பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.

கடன் வாக்கிய பணத்தை கேட்டு தொல்லை
கடன் வாங்கிய பணத்தைக் கேட்டு தொல்லை

வசந்தகுமார் இரண்டு வங்கிகளில் கிரெடிட் கார்டு, ஒரு வங்கியில் தனிநபர் கடன் என சுமார் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கரோனா ஊரடங்கு காலத்தில் வேலையில்லாமல் பணக்கஷ்டத்தில் இருந்ததால் வசந்தகுமார் தவணையைச் சரியாகச் செலுத்தவில்லை.

ஏஜென்டுகள் தொல்லை தாக்காமல் கடன் வாங்கியவர் தற்கொலை
முகவர்கள் தொல்லை தாங்காமல் கடன் வாங்கியவர் தற்கொலை
இதையடுத்து, வங்கிகளால் நியமிக்கப்பட்ட முகவர்கள் தொடர்ந்து வசந்தகுமாரிடம் பணம் கேட்டுத் தொல்லை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாள்களாக கடும் மன உளைச்சலில் வசந்தகுமார் இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜன. 08) அதிகாலை வீட்டின் படுக்கை அறையில் இருந்த வசந்தகுமார் காணவில்லை என அவரது மனைவி வீட்டில் தேடிப் பார்த்தபோது சமையல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பெரவள்ளூர் காவல்துறையினர்
பெரவள்ளூர் காவல் துறையினர்

இதையடுத்து, தகவல் அறிந்த பெரவள்ளூர் காவல் துறையினர் வசந்தகுமார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் டிவி அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு பார்சல்: 10 வருடத்திற்குப் பிறகு குற்றவாளி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.