தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவின்போது ஆள்மாறாட்டத்தைத் தடுக்க விண்ணப்பதாரர்களின் நிகழ்வு இணைய கேமரா மூலம் பதிவுசெய்யப்படுகிறது. இந்தப் பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய சி.டி.யை சம்பந்தப்பட்டவர்கள் ரூ.50 பணம் செலுத்திபெற்றுக் கொள்ளலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சி.டி. வழங்கப்படாமல் அதற்கான பணம் மட்டும் வசூலிக்கப்பட்டுவந்தது.
இது குறித்து எழுந்த புகாரின்பேரில் 2019ஆம் ஆண்டு முதல் சி.டி. வழங்க ஒப்பந்த நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சி.டி.க்கான கட்டணத்தை ரூ.50 ரூபாயிலிருந்து ரூ.100 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தக் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 24 ஆண்டுகளுக்கு பிறகு கொத்தடிமைத் தொழிலாளர் கணக்கெடுப்பு!