ETV Bharat / state

நடைமுறையில் உள்ள திட்டங்களைக்கூட அறியாமல் தேர்தல் அறிக்கை வெளியிடும் முதலமைச்சர்

author img

By

Published : Mar 17, 2021, 12:46 PM IST

Updated : Mar 17, 2021, 9:23 PM IST

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் மீண்டும் புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம் எந்த வகுப்பு வரையில் செயல்படுத்தப்படுகிறது என்பதுகூட தெரியாமல் அறிவிப்பு வெளியிட்டிருப்பது வியப்பளிக்கிறது.

blenders-in-the-aiadmk-election-manifesto-2021

சென்னை: தமிழ்நாட்டில் தேர்தலுக்கான தேதி நெருங்க நெருங்க ஆட்சியில் இருக்கும் கட்சியும், ஆட்சிக்கு வரத் துடிக்கும் கட்சிகளும் மக்களைக் கவர கண்கவர் திட்டங்களை தேர்தல் அறிக்கைகளாக வெளியிட்டு வருகின்றன. ஆனால் இவர்கள் அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்துவது சாத்தியமா, அவை நடைமுறைக்கு ஏற்றவையா என்பன குறித்த எவ்வித ஆய்வுகளும் சிந்தனைகளும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை என்பதையே இந்தத் தேர்தல் அறிக்கைகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

குறிப்பாக தற்போது தமிழ்நாட்டைத் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்துவந்த அதிமுக வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை பலரையும் வியப்பிற்குள்ளும் நகைப்பிற்குள்ளும் ஆழ்த்துகிறது. காரணம், இதில் நடைமுறையில் உள்ள திட்டங்களும், நடைமுறைப்படுத்த சாத்தியங்களே இல்லாத திட்டங்களும் ஏராளமாக அடங்கியுள்ளன. அவற்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இதையும் படிங்க: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- நேரடி ஒளிபரப்பு!

முதலாவதாக, அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆரின் பெயரில் பல ஆண்டுகளாக செயல்பட்டுவரும் சத்துணவுத் திட்டம். இவை தற்போதே ஒன்பது மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்தத் திட்டம் ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வரை விரிவுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் பங்களிப்புடன் சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமும் நடைமுறையில் உள்ளதே! இன்னும் கூறினால் இந்தத் திட்டம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பல எதிர்ப்புகளை சந்தித்ததும் அனைவரும் அறிந்ததே.

எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம்

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் சத்துணவு திட்டத்தின் விவரம்

இந்நிலையில், அதிமுகவின் இந்தத் தேர்தல் அறிக்கை தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழனிசாமி, "பொதுச்செயலாளர் ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்துணவு திட்டம் ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரிவுபடுத்தபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எம்ஜிஆர் ஆட்சியில் இருந்தபோதே 1984ஆம் ஆண்டில் ஒன்பது, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, இன்றுவரை அவர்களுக்கு தொடர்ந்து மதிய உணவு வழங்கபட்டு வருகிறது. நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவுபடுத்துகிறேன் பேர்வழி என்று சுய நினைவோடுதான் அறிக்கை எழுதினார்களா?

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசின் காலிப் பணியிடங்களில் முன்னுரிமை என்பது அவலத்தின் உச்சம். கடந்த 38 ஆண்டுகளாக சத்துணவுத் திட்டத்தில் பணியில் சேர்ந்த ஊழியர்கள் தற்காலிக ஊழியர்களாகவே இருந்து பணி ஓய்வு பெற்று வருவது தொடர் கதையாக உள்ளது. இந்தத் திட்டத்தில் பணியாற்றும் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சமையலர், உதவியாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு எந்தவகையில் முன்னுரிமை கொடுக்கப்படும்? மேலும், காலை சிற்றுண்டி திட்டத்திற்காக தனியார் பங்களிப்பு ஏன் கொண்டு வரப்படுகிறது?" எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார்.

இதையும் படிங்க: சத்துணவுத் திட்டத்தில் உணவூட்டும் செலவினம் உயர்வு!

அதேபோல் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகத்தின் அமைப்பாளர் ஆண்ரூ சேசுராஜ் கூறும்போது, "அதிமுக தேர்தல் அறிக்கையில் சத்துணவுத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் எனக் கூறியிருப்பது வரவேற்புக்குரியதுதான். ஆனால் புரியாதது என்னவென்றால் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே சத்துணவு சாப்பிட்டுள்ளேன். அப்போதே நடைமுறையில் உள்ள திட்டத்தை அதுவும் அந்தக்கட்சியின் நிறுவனர் பெயரில் இருக்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிந்துகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது.

அதேபோல, காலை சிற்றுண்டி வழங்கும் நடைமுறையும் ஏற்கனவே உள்ளது. இந்தத் திட்டத்தை தனியாருக்கு கொடுப்பது என்பது தவறானது. ஏற்கனவே தனியார் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டபோது அந்த நிறுவனம் வெங்காயம், பூண்டு தவிர்த்து குழந்தைகளுக்கு சமைத்தது பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை சம்பாதித்தது. குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். எனவே இதுபோன்ற பணிகளை அரசு தனியாரிடம் அளித்து நழுவிச் செல்லக் கூடாது.

வீட்டிற்கு ஒருவருக்கு அரசுப் பணி அளிப்பதாக உறதி அளிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்க வேண்டியதாக இருப்பினும், ஏற்கனவே பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதித்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனக் கூறியதையே நிறைவேற்றாமல் உள்ள நிலையில், எப்படி மாநிலம் முழுவதும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஒரு கட்சி மேலும் தெளிவான தேர்தல் அறிக்கையை அளித்திருக்கலாம். இந்தத் தேர்தல் அறிக்கை போகிறப்போக்கில் அளித்தெளித்த வாக்குறுதியாகத்தான் உள்ளது.

இதையும் படிங்க:'அட்சய பாத்திர திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடைபெறும்' - கி. வீரமணி

கல்விக்கு நிறைய முக்கியத்துவங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கப்பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில், அதன் தரத்தை உயர்த்துவதற்கான எந்தத் திட்டங்களும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவில்லை" என்றார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் கட்டாயப் பாடமாக்கபடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுபான்மை மொழி கற்கும் மாணவர்களுக்கான விலக்கு

தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006ஆம் ஆண்டு முதலே அமலில் உள்ளது. 2006-2007 கல்வி ஆண்டில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு, தமிழ் முதல் மொழிப்பாடமாக கற்பிக்கப்பட்டது. பின் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. 2015-2016 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புக்கு தமிழ் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து சிறுபான்மைப் பள்ளிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனைத் தொடர்ந்து, சிறுபான்மைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்திலிருந்து அதிமுக அரசு விலக்கு அளித்துள்ளது.

திமுக ஆட்சியில் போடப்பட்டு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால் உருவான இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாமல், தனியார் பள்ளிகளின் வசதிக்காக அதிமுக அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டுவிட்டு, தற்போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் கட்டாயப் பாடமாக்கப்படும் எனக் கூறியுள்ளது.

திட்டங்களைக்கூட அறியாமல் தேர்தல் அறிக்கை வெளியிடும் முதலமைச்சர்

இதையும் படிங்க: மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் தேர்வு எழுத 3ஆண்டு விலக்கு- உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 1956ஆம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஏற்படுத்தப்பட்ட உயர் நீதிமன்றங்களுக்கு அந்தந்த மாநிலங்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளன. எனவே சென்னை உயர் நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார்.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற பெயர் மாற்ற தீர்மானம்

அதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்ற வேண்டும் என ஆகஸ்ட் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே அறிவித்ததை இத்தனை ஆண்டு காலம் தொடர்ந்து மத்திய அரசுடன் இணக்கமான இருந்துவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. ஆனால் மீண்டும் அதிமுக தேர்தல் அறிக்கையில் பெயர் மாற்றம் செய்திட மத்திய அரசை வலியுறுத்துவோம் என கூறியுள்ளனர்.

நீதிமன்ற பெயர்மாற்றம் கோரி ஜெயலலிதாவின் கடிதம்

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை தீவிரமாக அமல்படுத்தும்நோக்கில் படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் எனக் கூறியுள்ளனர். 2016ஆம் ஆண்டில் முதலமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் 500 மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டார். அதன் பின்னர் கரோனா காலத்தில் தொற்று பரவுவதைத் தடுக்க மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகளால் அரசின் வருவாய் பாதிப்படைவதாகக் கூறி நீதிமன்றத்தின் தலையீட்டால் திறந்தனர்.

கரோனா காலத்தில் மதுபானக்கடைக்கு திரண்ட மக்கள்

பின்னர், அண்டை மாநிலங்களில் மதுப்பானக் கடைகள் தொடர்ந்து இயக்கப்படுவதால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்குக்கு சாத்தியமில்லை எனக் கூறி வந்தனர். இந்த நிலையில் மீண்டும் பூரண மதுவிலக்கு எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA)ஆதரவாக வாக்களித்துவிட்டு, தேர்தல் அறிக்கையில் அதனை திரும்பப் பெற வலியுறுத்துவோம் எனக் கூறியுள்ள அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது பலரையும் கேள்விக்குள்ளாக்குகிறது. "இந்தச் சட்டத்தால் ஒரு இஸ்லாமியராவது பாதிக்கப்பட்டுள்ளாரா?" எனக் கேள்வி எழுப்பிய முதலமைச்சரின் வாயாலே இந்த அறிக்கை வாசிக்கப்பட்டதை பலரும் கேலிக்குள்ளாக்குகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 50 விழுக்காடு காலிப் பணியிடங்கள் உள்ளன. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பப்படாமல் உள்ளன. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, இந்தப் பணியிடங்களை நிரப்பாமலும், பொதுத் துறை நிறுவனங்களில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் இருந்துவிட்டும் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அம்மா மினி கிளினிக்

ஓய்வுபெற்ற அரசு மருத்துவரும் தமிழ்நாடு உறுப்புமாற்று அறுவை சிகிச்சைத் திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் அமலோற்பவநாதன் கூறும்போது, "தமிழ்நாட்டில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன. அதற்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறைப் பணியாளர்களையும் அவுட்சோர்சிங் முறையில் தான் நியமனம் செய்துள்ளனர். இந்த மினி கிளினிக் பணிக்கு வந்த மருத்துவர்களிடம் நீங்கள் எந்தக் காலத்திலும் அரசுப் பணி கேட்கக்கூடாது என அடிமை சாசனம் எழுதி வாங்கிக் கொண்டுத்தான் பணி அளித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு, பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். இதில் பல்வேறு மட்டத்தில் லஞ்சம், லாவண்யம் இருந்தது.

இதையும் படிங்க: மினி கிளினிக்கில் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பு அலுவலகம் போன்றவை இருக்கும்போது, பெயர் தெரியாத தனியார் நிறுவனங்களின் மூலம் ஆட்களை தேர்வு செய்த இவர்கள், எப்படி ஒரு கோடி குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கப் போகிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

Last Updated : Mar 17, 2021, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.