இந்தியாவில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 140-க்கும் மேல் உயர்ந்துள்ளது. இதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசுகையில், "மத்திய அரசு, அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்பியுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு மிகச் சிறந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மக்களின் அச்சம் போக்கும்வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இதற்கு அனைத்து கட்சியைச் சார்ந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
பாஜக சார்பில் மார்ச் 20ஆம் தேதியிலிருந்து, ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடத்தவிருக்கிறோம். கரோனாவின் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு, அதனை விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: சாதனைகளை நோக்கி முன்னேற பெரியோர் பாதையை பின்பற்ற வேண்டும் - பன்வாரிலால் புரோகித்