சென்னை: தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அப்போது பேசிய அவர், “உலக முதலீட்டாளர் மாநாடு பற்றிப் பேசுவோம், முதலீட்டாளர் மாநாடு வெற்றி அடைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் 34 சதவீதம் உற்பத்தித் திறன் உள்ளது. ஆகையால் பிற மாவட்டங்களில் தொழிற்சாலைகள் வர வேண்டும் என்பது எங்களது எண்ணம்.
-
Brief extract of my speech in Mettur, Pappireddipatti & Harur yesterday during our #EnMannEnMakkal PadaYatra. pic.twitter.com/tCAoFevcEG
— K.Annamalai (@annamalai_k) January 9, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Brief extract of my speech in Mettur, Pappireddipatti & Harur yesterday during our #EnMannEnMakkal PadaYatra. pic.twitter.com/tCAoFevcEG
— K.Annamalai (@annamalai_k) January 9, 2024Brief extract of my speech in Mettur, Pappireddipatti & Harur yesterday during our #EnMannEnMakkal PadaYatra. pic.twitter.com/tCAoFevcEG
— K.Annamalai (@annamalai_k) January 9, 2024
மேலும், நடந்து முடிந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாடு 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது. ஆனால் நாங்கள் 10 லட்சம் கோடி எதிர்பார்த்தோம். 2023 உத்திரபிரதேசம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது. அதில் 33 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை உத்தரபிரதேச மாநிலம் ஈர்த்துள்ளது.
மேலும், குஜராத்தில் மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதற்குள் 7 லட்சம் கோடி ரூபாய் ஈர்த்துள்ளது. எனவே, தமிழக அரசு இலக்குகளை அதிகப்படுத்த வேண்டும். அதானி குழுமத்தை தமிழக அரசு கடுமையாகப் பேசியது, ஆனால் இன்று தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 66 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டால், தற்போது முதலமைச்சர் டிவிட்டரில் பெருமையாகப் பேசுகிறார்.
நேற்றைய தினம் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்ட பல்வேறு நிறுவன அதிகாரிகள் பியூஷ் கோயலை சந்தித்துள்ளனர். மேலும், அடுத்த முறை தமிழகத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக அளவு முதலீடுகளை ஈர்க்க வேண்டும். இதில் நான் அரசியல் பேச விரும்பவில்லை.
என் மண், என் மக்கள் யாத்திரையில் 144 தொகுதிகளைக் கடந்துள்ளோம். தமிழகத்தில் அரசியல் பாதை மாற வேண்டும் என்று இந்த யாத்திரை தெளிவுபடுத்தியுள்ளது. நாங்கள் தெளிவாக உள்ளோம், பாஜக 2024 தேர்தல் குறித்து தற்போது பேசத் தொடங்கவில்லை. 2024 தேர்தலுக்காக பாஜக தயாராக இருக்கிறதா என்று என்னால் கூற முடியாது, எனக்கு அதற்கு அதிகாரம் இல்லை. யார் கூட்டணியில் இருக்கிறார்கள் இல்லை என்பதை என்னால் கூற முடியாது இந்த முறை களம் மாறிவிட்டது. 2024இல் நரேந்திர மோடி மீண்டும் 3வது முறை பிரதமராக வர போகிறார்.
மேலும், என்ன தான் போக்குவரத்து சங்கங்கள் பேசினாலும், அதனை ஏற்கும் தன்மை அமைச்சர் சிவசங்கருக்கு இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டின் நிதி சூழல் அவ்வளவு சிக்கலாக உள்ளது. அரசிடம் பணம் இல்லை, எனவே சிவசங்கர் மற்றும் முதல்வருக்குத் தெரியும் பேச்சு வார்த்தைகளில் பலன் இல்லை என்று. இன்று பேருந்துகள் இயங்கும், ஆனால் இரவும் அதே ஓட்டுநர்கள் ஓட்டுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
பொங்கல் பண்டிகை அன்று என்ன செய்வார்கள். போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களுக்கு இதனைச் சமாளிக்க முடியாது. நிதி சூழலில் உள்ள சிக்கல்கள் இன்னும் இது போன்ற பல விஷயங்களை நாம் முன்னாள் கொண்டு வந்து நிறுத்த உள்ளோம். தமிழகத்தில் ஒரு ரேஷன் கார்டு மீது 3 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க் கடன் இருக்கிறது.
ஹிந்தி தொடர்பாக விஜய் சேதுபதி கருத்திற்குப் பதில் அளித்த அண்ணாமலை, விஜய் சேதுபதி பற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை. ஹிந்தி படிப்பது அவர் அவர்கள் உரிமை. ஹிந்தி படிக்க விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம். மூன்று மொழி தேவை, தமிழ், ஆங்கிலம் மட்டுமே வைத்து வெற்றி பெற முடியாது. விஜய் சேதுபதி கருத்தைக் கருத்தாக பார்க்கிறேன். ஹிந்தியை யார் திணிக்கிறார்கள்? யாரும் திணிக்கவில்லை.
தொடர்ந்து மாலத்தீவு தொடர்பாகப் பேசியவர், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை விட, மாலத்தீவின் மக்கள்தொகை எண்ணிக்கை மிகக் குறைவு என்றார். உதயநிதி துணை முதலமைச்சராக வருவதற்குத் தகுதி இருக்கிறதா? அவர் ஆகட்டும், செயல்பாடுகள் குறித்துப் பார்ப்போம்.
விளையாட்டுத் துறையில் செலவிடப்படும் பணம் உண்மையில் செலவிட வேண்டியது தானா? விவசாயிகளுக்குச் செலவு செய்ய வேண்டியதா? இல்லை மேட்டூர் அணையைத் தூர்வாரக் கூடிய பணமா என்பதைப் பார்க்க வேண்டும். விளையாட்டுத் துறையில் செலவு பண்ண வேண்டிய பணம் எல்லாம் வேறு துறையில் செலவு செய்திருக்கலாம். ஆனால் அவர் தனக்கு வெளிச்சம் ஏற்படுத்தவே இதனைச் செய்து வருகிறார் என்பது போல எனது பார்வையில் தெரிகிறது.
உதயநிதி ஸ்டாலின் அடிமட்ட இடத்திலிருந்து ஒருவரை எப்படி உருவாக்கி இருக்கிறார்கள்? ஒரு ஆண்டில் நான் என்ன செய்துள்ளேன், ஒரு ஒலிம்பிக் சாம்பியனை உருவாக்க என்ன முயற்சி செய்துள்ளேன் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். தமிழகத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டிற்கு வந்த முதலீடுகள் பிரதமருக்காக வந்தது திமுகவிற்காக வரவில்லை” எனத் தெரிவித்தார்.