ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த பாஜக எம்எல்ஏ!

கட்சி பாராமல் தொகுதிக்கு திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கொடுக்கிறார் என பாஜக சட்டப்பேரவை குழுவின் தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சருக்குப் பாராட்டு தெரிவித்தார்.

கட்சியின் பிரதான எதிரியான முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த பாஜக நயினார் நாகேந்திரன் bjp-nainar-nagendran-praised-cm-stalin-in-assembly
கட்சியின் பிரதான எதிரியான முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த பாஜக நயினார் நாகேந்திரன்bjp-nainar-nagendran-praised-cm-stalin-in-assembly
author img

By

Published : Apr 25, 2022, 4:59 PM IST

Updated : Apr 25, 2022, 5:06 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று வனத்துறை (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அதில், அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சி.வீ.மெய்யநாதன் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் இன்று (ஏப். 25) தொடங்கியதும் கேள்வி நேரத்தின் போது பேசிய பாஜக சட்டப்பேரவை குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, ’திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 9 அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளும், 18 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், மானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டு 2022-23ஆம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இதைத்தவிர 1 அரசு பொறியியல் கல்லூரியும், 12 சுயநிதி பொறியியல் கல்லூரியும், 1 பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் மற்றும் 1 அரசு உதவி பெறும் தொழில்நுட்பக் கல்லூரியும், 14 சுயநிதி தொழில் நுட்பக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் தொகுதி மாணவர்களின் உயர்கல்வி தேவைகளை நிறைவு செய்வதால், புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை’ எனத்தெரிவித்தார்.

இதனையடுத்து, திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசிய போது, ’இந்த கல்லூரி நமது அரசு வந்த உடன் முதன்முதலில் போடப்பட்டு, அதை உடனடியாக முதலமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்தார். அதற்கு நன்றி.

ஏற்கெனவே நன்றி சொல்லிவிட்டேன். இரண்டாம் முறை நன்றி சொல்கிறேன். அதேபோல் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு 30 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் அறிவுறுத்தலின்பெயரில் அறநிலையத் துறை அமைச்சர் திட்டங்களை கொடுத்துள்ளார்.

மேலும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி புறவழிச்சாலை வெகு விரைவில் அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் முதலமைச்சர் ஏற்கெனவே ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நிலையம் 18 கோடி ரூபாய் செலவில் திருநெல்வேலியில் அமைத்துத் தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இப்படித்தொடர்ந்து, கட்சி பாராமல் திருநெல்வேலி மாவட்டத்திற்குத் திட்டங்கள் தரும் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: பெரியார் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமரியாதை செய்தது இல்லை - நடிகர் சிவக்குமார்

Last Updated : Apr 25, 2022, 5:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.