ETV Bharat / state

பொய் புகார் அளித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை ஜெயலட்சுமி புகார்!

கந்துவட்டி கேட்பதாக தன் மீது பொய் புகார் அளித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை ஜெயலட்சுமி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை ஜெயலட்சுமி புகார்
நடிகை ஜெயலட்சுமி புகார்
author img

By

Published : Sep 14, 2021, 8:33 PM IST

சென்னை: பிரபல சினிமா நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி, மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வங்கியில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு, தற்போது கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக நேற்று (செப்.13) கீதா என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து தன் மீது கீதா பொய் புகார் அளித்துள்ளதாக கூறி நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி இன்று (செப்.14) காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கந்துவட்டி புகார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி, "2019ஆம் ஆண்டு கரோனா காலத்தில் வேலையில்லாமல் தவிப்பதாக கூறி கீதா என் வீட்டிற்கு வந்து அழுததால், என்னால் முடிந்த தொகையை கொடுத்து உதவினேன். இந்த பணத்தை கீதா ஐந்து மாதங்களுக்குள் திருப்பி தருவதாக கூறி கையெழுத்திட்ட வெற்று காசோலையை என்னிடம் கொடுத்து சென்றார்.

கீதா பல பெண்களை என்னிடம் அழைத்து வந்து அவர்கள் பாஜகவில் சேர விரும்புவதாக தெரிவித்தார். மேலும், அவர்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த பணமில்லை எனக் கூறியதால் மனமுருகி பணம் அளித்துள்ளேன்.

கீதாவிடம் கொடுத்த பணத்தை நான் திருப்பி கேட்டதற்கு, அவர் பணத்தை தரமறுத்து என் மீது தற்போது கந்துவட்டி புகாரை கொடுத்துள்ளார்" என்றார்.

சூழலை பயன்படுத்தி பொய் புகார்

மேலும், " என் மீது புகார் கொடுத்த கீதா பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். என்னை நம்பவைத்து அவர் ஏமாற்றியுள்ளார். கீதா மற்றும் அவரது குழுவினர் பணத்தை திருப்பி கொடுக்காததால் கடந்த மார்ச் மாதம் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். கரோனா காரணமாக புகார் மீது விசாரணை நடைபெறவில்லை.

தற்போது இந்த சூழலை கீதா தனக்கு சாதகமாக பயன்படுத்தி என் மீது பொய் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தீர விசாரித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமை: நடிகை ஜெயலட்சுமி மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.