ETV Bharat / state

அண்ணாமலை இல்லாமல் நடைபெறும் பாஜக மாநில ஆலோசனைக் கூட்டம்!

BJP meeting without Annamalai: அண்ணாமலை தலைமையில் நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BJP meeting without Annamalai
அண்ணாமலை இல்லாமல் நடைபெறும் பாஜக மாநில ஆலோசனைக் கூட்டம்..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 11:32 AM IST

Updated : Oct 3, 2023, 12:28 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் மத்தியில் பாஜக, மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. மறுபுறம் பாஜகவை மத்திய ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்து பாஜகவிற்கு எதிராக வியூகம் வகுத்து வருகின்றனர்.

இப்படியாக நாடாளுமன்றத் தேர்தல் களம் அதகளப்படுத்தப்பட்டு வரும் நிலையில்தான், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாது சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து, இது தொடர்பாக செய்தியாளர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, தேசிய தலைமைதான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் என பதில் அளித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜகவின் தலைமை நிர்வாகிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை அளித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று நேற்று (அக் 02) நேரில் சந்தித்துப் பேசினார். இதனிடையே இன்று (அக்.3) சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு நடைபெற இருந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் மற்றும் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லிக்குச் சென்றுவிட்டு இன்னும் திரும்பி வராத காரணத்தால், இன்று (அக்.3) நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், வேறு தேதியில் நடத்த இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், திடீர் திருப்பமாக இன்றைய தினம் தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல், நிர்வாகிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அக்.6-இல் டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்!

Last Updated : Oct 3, 2023, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.