தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிகளின் சார்பாக பரப்புரை மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகத் தமிழ்நாட்டிற்குப் பலமுறை வந்துசென்றுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி ராகுல் காந்தி பரப்புரைக்குத் தடைவிதிக்கக் கோரி பாஜக சார்பில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிய உத்தரவிடக் கோரியும், பரப்புரைக்கு தடைவிதிக்க உத்தரவிடக் கோரியும் தேர்தல் ஆணையத்திற்கு பாஜக தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.