ETV Bharat / state

பாஜக பிரமுகர் கல்யாணராமன் ட்விட்டர் பக்கம் நிரந்தர முடக்கம்? - bjp leader kalyanaraman

பாஜக பிரமுகர் கல்யாணராமனின் ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்க காவல் துறையினர் தரப்பில் ட்விட்டர் நிறுவனத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கல்யாணராமன்
கல்யாணராமன்
author img

By

Published : Oct 17, 2021, 5:32 PM IST

நீதிமன்ற பிரமாணப் பத்திரத்தை மீறி, இரு மதத்தினருக்கிடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவிட்ட பாஜக பிரமுகர் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர்.

மேலும், கல்யாணராமன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை, தனது சமூக வலைதளத்தின் மூலம் பதிவிட்டதால், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முக்கியத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பற்றி அவதூறு பரப்பும் வகையிலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதால், சென்னை சிட்லப்பாக்கத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 2017, 2018ஆம் ஆண்டுகளில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்தும் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குண்டர் சட்டத்தில் கைது

முன்னதாக அவர் ஜனவரி, 2021 கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவதூறாகப் பேசி பொதுமக்கள் அமைதியைக் குலைக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வந்ததால், பிப்ரவரி மாதம் 2021ஆம் ஆண்டில் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார், கல்யாண ராமன். பின்னர் அவர் மீதான குண்டர் சட்டமும் ரத்தானது. அதன் பிறகு ஜாமின் மனு தாக்கல் செய்யும்போது 'மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்துப் பதிவிட மாட்டேன்’ என நீதிமன்றத்தில் பிணைப்பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார்.

பிணையில் வந்த பின்பும் சர்ச்சைக் கருத்துகள் பதிவு

அதனடிப்படையில் பிணையில் வெளிவந்த பிறகும் அரசியல் தலைவர்களையும், அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் அவதூறாக கருத்துப் பதிவிட்டு வந்ததாலும், பிராமணப் பத்திரத்தை மீறி இரு மதத்தினருக்கு இடையே பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் சமூக வளைதளத்தில் தொடர்ந்து கருத்துப்பதிவிட்டதாலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோபிநாத் என்பவர், சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைப் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டதன் அடிப்படையில், அதன் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

நள்ளிரவில் கைது

கைது செய்வதற்கு முன்பு வரை, தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பல பேர் பற்றிய தவறான கருத்துகளைப் பதிவிட்டு வந்ததால், பாஜக பிரமுகர் மீது கண்டனங்களும் எழுந்தன.

இதனையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கோபிநாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் இரண்டு பிரிவுகளின்கீழ், கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று (அக்.17) இரவு அவரது வீட்டில் அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குத் தனிப்படை சென்றபோது, கல்யாணராமனும் அவரது நண்பர்களும் மது போதையில் தகராறில் ஈடுபட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பாஜகவைச் சேர்ந்த உங்களைப் போன்றவர்கள் மது குடித்துவிட்டு அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா எனக் கேட்டதற்கு காவலர்களை அவர் அவதூறாகப் பேசியதாகவும் தெரிகிறது.

ஏழு ஆண்டுகள் தண்டனைக்குக்குறைவாக உள்ள சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் 41a கிரிமினல் நோட்டீஸ் கொடுத்து விசாரணை நடத்துமாறு கோரி, கைதுக்கு ஒத்துழைக்காமல், வீட்டினுள் சென்று பூட்டிக் கொண்டதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது

அதேபோன்று ஏழாண்டுகள் தண்டனைக்குறைவாக சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தாலும் முறையாக விசாரணைக்கு ஒத்துழைக்காதபோது கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற அடிப்படையிலேயே காவலர்கள் கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முயற்சித்தால், பாஜக பிரமுகர் கல்யாணராமனை காவலர்கள் குண்டுக்கட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கல்யாணராமன் காவலர்களிடம் விசாரணை நடத்தி சென்னை எழும்பூரில் உள்ள நீதிபதி குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ட்விட்டர் பக்கம் நிரந்தர முடக்கம்?

அதேபோல் கல்யாணராமனின் ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்கவும் காவல் துறைத் தரப்பில் பரிந்துரைக்கப்படுள்ளது.

கல்யாணராமன் அவதூறாகப் பதிவிட்ட ட்விட்டர் கருத்துகளை அழித்துவிட்டு, அவரது ட்விட்டர் பக்கத்தை முடக்குவதற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு, ட்விட்டர் நிறுவனத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.