ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல்: என்னது 100 விழுக்காடா? - திமுக மீது சந்தேகம் எழுப்பும் பாஜக - பாஜக திமுக மீது குற்றச்சாட்டு

'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நூறு விழுக்காடு வெற்றிபெறுவோம்' என்று மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது தங்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக பாஜக நிர்வாகி கராத்தே தியாகராஜன் இன்று (டிசம்பர் 9) சென்னையில் நடந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்குப் பிறகு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக மீது சந்தேகம் உள்ளது - பாஜக குற்றச்சாட்டு

author img

By

Published : Dec 9, 2021, 4:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட வாக்காளர்களின் புகைப்படத்துடன்கூடிய இறுதிப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், மாவட்டத் தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.

இந்த வாக்காளர் பட்டியலின்படி, சென்னையில் மொத்தம் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதில், 30 லட்சத்து 23 ஆயிரத்து 803 பேர் ஆண் வாக்காளர்கள், 30 லட்சத்து 93 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்கள், ஆயிரத்து 576 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் என்று தெரியவந்துள்ளது.

சென்னை மாநகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஸ்டாலினின் 100% நம்பிக்கை: பாஜக சந்தேகம்

சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலருடான கூட்டம் முடிந்த பின் செய்தியாளரைச் சந்தித்த சென்னை மண்டல பாஜக பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், ”நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வார்டுகளுக்கான புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் பட்டியலை டெல்லி தேர்தல் ஆணையம் நவம்பர் மாதம் வெளியிட்டது.

அதன் அடிப்படையிலேயே இந்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் இறுதி நாட்கள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு வேட்புமனு தாக்கலுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளோம்.

திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஸ்டாலின், 100 விழுக்காடு இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று கூறியிருப்பது எங்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இருப்பினும், இந்தத் தேர்தலை மாநகராட்சி ஆணையரும் காவல் ஆணையரும் நேர்மையாக நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

மக்களே இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் தாமோதரன், ”தேர்தல் நடக்கும் இறுதி நாட்கள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் கால அவகாசம் உள்ளது. எனவே, மக்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:பிபின் ராவத் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.