ETV Bharat / state

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட இருவர் கைது! - aarudhra harish

ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட இருவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து, 30க்கும் மேற்பட்ட சொத்துக்களை முடக்கி உள்ளனர்.

ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி உள்பட இருவர் கைது!

author img

By

Published : Mar 25, 2023, 6:53 AM IST

சென்னை: அதிக வட்டி தருவதாகக் கூறி ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் 2,438 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

குறிப்பாக இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் இயக்குனர்கள் பாஸ்கர், மோகன் பாபு, செந்தில்குமார், நாகராஜ், மேனேஜர்கள் பேச்சிமுத்து ராஜா, ஐயப்பன், ஏஜென்ட் ரூசோ மற்றும் சந்திரசேகர் ஆகிய 8 பேர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதேநேரம் இந்த நிறுவனத்தின் மேனேஜிங் இயக்குனர் ராஜசேகர், மைக்கேல் மற்றும் உஷா ராஜ் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதால், அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் இதுவரை ரொக்கமாக 5.69 கோடி ரூபாயும், 1.13 கோடி மதிப்புள்ள தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் ஏஜெண்டுகளின் வங்கி கணக்கு இருப்பில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டு, வழக்கில் தொடர்புடைய 97 சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் தலைமறைவாக இருந்து வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனரில் ஒருவரான ஹரிஷ் மற்றும் நிர்வாகி மாலதி ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள ஹரிஷ், இந்த வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். மேலும் இவருக்கு சமீபத்தில் பாஜகவில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாநிலச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மோசடியில் ஈடுபட்டதால் அவர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஹரிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் காரணமாக ஹரிஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்து உள்ளார். மேலும் இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து 210 கோடி ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இவ்வாறு மோசடி செய்த பணத்தில் 30க்கும் மேற்பட்ட சொத்துக்களை ஹரிஷ் வாங்கி உள்ளார். இதனையடுத்து அவருக்கு சொந்தமான வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் இடைமுடக்கம் செய்துள்ளனர்.

அதேநேரம் ஆருத்ரா நிறுவனத்தின் கூடுதல் இயக்குனரான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மாலதி, காட்பாடி மற்றும் திருப்பூர் போன்ற மாவட்டங்களில் பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்த நிலையில், அவரிடம் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஹரிஷிடம் மோசடி செய்த பணத்தை பதுக்கி வைத்திருப்பது குறித்தும், சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பது குறித்தும், மேலும் தலைமறைவாக இருந்து வரும் இயக்குனர்கள் குறித்தான விவரங்களையும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டியை கட்டி போட்டு நிர்வாண வீடியோ எடுத்த கொள்ளையர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.