சமூக வலைதளங்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக தகவல் தொழில்நுட்ப அணியினர், டிஜிபியிடம் புகார் மனு கொடுத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில அமைப்பாளர் நிர்மல்குமார்,
"சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர்களில் பிரதமர், மத்திய அரசுக்கு எதிரான தவறான கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளோம். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் தலைமை இயக்குநர் தெரிவித்தார். இந்த புகார் மனுவானது நகைச்சுவைக்காகப் பதிவிடுபவர்கள் மீது அளிக்கப்படவில்லை.
நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிராகப் பொய்யான தகவல்களைச் சமூக ஊடகங்களில் பரப்பி, மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவிட்டு வருபவர்கள் மீதே அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவிடுபவர்கள் தனி நபர்களாக இருக்க முடியாது. அவர்களின் பின்னணியில் நிச்சயம் ஒருசில அமைப்புகள் இயங்கிவரலாம்" என்றார்.
இதையும் படிக்கலாமே: பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் தினமும் 8 விவசாயிகள் தற்கொலை - அதிர்ச்சி ரிப்போர்ட்