சென்னை: தமிழ்நாடு பாஜக செயலர் அஸ்வத்தாமன், நேற்று (ஜன.9) ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி உரையாற்றியபோது, சட்டமன்ற உறுப்பினர்களான வேல்முருகன், ஜவாஹிருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் பெரும் கூச்சலிட்டுள்ளனர்.
அவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, ஆளுநரை ஜனநாயக கடமையாற்ற விடாமல் மிரட்டும் தொணியில் செயல்பட்டுள்ளனர். ஆளுநரை பயமுறுத்தி, பணி செய்ய விடாமல் தடுக்கிற எண்ணத்தில் சைகை காட்டியுள்ளனர். இது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே, கூச்சலிட்டு மிரட்டும் தொணியில் செயல்பட்ட வேல்முருகன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஆளுநரின் ஆளுமையே நமஸ்தே' புதுக்கோட்டையில் பாஜக போஸ்டர் அடித்து ஆதரவு