ETV Bharat / state

விரைவில் கொடுங்கையூர் குப்பை கிடங்கிலும் பயோ மைனிங் முறை! - Chennai News

சென்னை கொடுங்கையூரில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை ரூ.648 கோடி செலவில் பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

விரைவில் கொடுங்கையூர் குப்பை கிடங்கிலும் பயோ மைனிங் முறை!

author img

By

Published : Nov 30, 2022, 11:38 AM IST

சென்னை மாநகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 5,000 டன் குப்பைக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் பிரதானமான குப்பைக் கழிவுகள் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கிற்கும், பெருங்குடி குப்பைக் கிடங்கிற்கும் கொண்டு செல்லப்படுகிறது. பெருங்குடி குப்பை கிடங்கில் தேங்கியிருக்கும் கழிவுகளை ஏற்கனவே பயோ மைனிங் மூலம் மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நீண்ட காலமாக கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளால் நிலத்தடியில் ரசாயன தன்மை அதிகரித்தும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலையும் உள்ளது.

இந்த நிலையில் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை பயோ மைனிங் முறையில் கையாளவும், கிடங்கை மறுசீரமைத்து நிலத்தை மீட்டெடுக்கவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி வல்லுநர்கள் குழுவுடனான ஆலோசனைகளின்படி, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு பயோ மைனிங் திட்டத்திற்கு ரூ.648 கோடி ரூபாய் செலவில், மொத்தம் ஆறு தொகுப்புகளாக செயல்படுத்தப்பட உள்ளது.

இவற்றில் மத்திய அரசு நிதியாக ரூ.160 கோடி (25%), மாநில அரசு நிதியாக ரூ.102 கோடி (16%) மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் ரூ.378 கோடி (59%) என ஒட்டுமொத்தமாக 648.83 கோடி ரூபாயில் இத்திட்டமானது செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் 251.9 ஏக்கர் பரப்பளவில் உள்ள 64,000 டன் எடையுள்ள குப்பைகள், பயோ மைனிங் செய்வதற்கு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறும் தீர்மானம் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மெரினாவில் வைஃபை, வள்ளுவர் கோட்டத்தில் மேம்பாலம்: சென்னை மாநகராட்சியின் தீர்மானங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.