சென்னை வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் இன்று (நவ.5) பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருவரும் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ராக்கி என்ற ராகேஷ் (27), தருண் கிருஷ்ணா (27) என்பதும், இவர்கள் வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து இவர்கள் திருடிய சுமார் 2 லட்சம் மதிப்பிலான, 5 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் இருவர் மீது ஏற்கனவே திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வழக்கு உள்ள நிலையில், அக்காவல் நிலையத்தில் ஒப்படைத்து, வழக்குப்பதிவு செய்த திருவொற்றியூர் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.