ETV Bharat / state

பிகில் விவகாரம்: வருமான வரித்துறையினரிடம் அவகாசம் கேட்ட 'மாஸ்டர்' விஜய் - பிகில் வருமான வரித்துறை பிரச்சனை

"மாஸ்டர்" படப்பிடிப்புக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ள நிலையில், வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராவதற்கு நடிகர் விஜய் கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay
Vijay
author img

By

Published : Feb 10, 2020, 2:39 PM IST

Updated : Feb 10, 2020, 2:50 PM IST

"பிகில்" படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறி வருமான வரித்துறையினர் தமிழகம் முழுவதும் அவ்விருவருக்கும் சொந்தமான 38 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் விஜயையும் அவரது வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். 4 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் அவரது நண்பருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 77 கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 1 1/4 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், நடிகர் விஜய் "பிகில்" படத்திற்கு வாங்கிய சம்பளப்பணம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் அந்த படத்திற்கு பெற்ற சம்பளம் மூலம் வாங்கியுள்ள அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற இறுதி நாள் சோதனையின் போது அடையாறு சாஸ்த்ரி நகரில் உள்ள நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் "பிகில்" திரைப்படம் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாகவும் விஜயிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் "பிகில்" திரைப்பட வசூலில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படும் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்துள்ளதாக பைனான்சியர் அன்புச்செழியன் ஒப்புதல் அளித்துள்ளார் எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய், கல்பாத்தி அகோரம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகிய மூவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராகி, சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளை தெளிவுபடுத்தக்கோரி வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து நடிகர் விஜய் உள்ளிட்ட 3 பேரும் இன்று வருமானவரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், "மாஸ்டர்" படப்பிடிப்பிற்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாலும், இன்று நெய்வேலியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாலும் நடிகர் விஜய் இன்று ஆஜராக வாய்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடிகர் விஜய் சார்பில் வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்க அவகாசம் கோரியுள்ளதாகவும், அவருக்கு பதில் அவருடைய வழக்கறிஞரோ, ஆடிட்டரோ ஆஜராக வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதையும் வாசிங்க: வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்த விஜய்; ரசிகர்கள் உற்சாகம்

Intro:Body:பிகில் திரைப்படம் தொடர்பாக கடந்த ஐந்தாம் தேதி முதல் வருமான வரித்துறையினர் நான்கு நாட்கள் நடிகர் விஜய், திரைப்பட பைனான்சியர் அன்புச் செழியன், மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்

இந்த சோதனையில் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து 77 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் ஒன்றரை கிலோ தங்க நகை மற்றும் 300 கோடி வருவாய் ஏய்ப்பு செய்யப்பட்டிருந்தது வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்

இந்த சோதனை தொடர்பாக மூவருக்கும் வருமான வரித்துறையினர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியிருந்தனர்

சம்மன் அனுப்ப பட்ட மூன்று நாட்களுக்குள் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்

பிகில் திரைப்படம் தொடர்பாக வருமான வரித் துறையிடம் நேரில் ஆஜர் ஆவதற்கு விஜய் தரப்பில் இருந்து 40 நாள் அவகாசம் கேட்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தொடர்ந்து 40 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் நேரில் ஆஜர் ஆவதற்கு அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும் இன்று விஜய் தரப்பிலிருந்து அவரது சார்பில் அவரது ஆடிட்டர் அல்லது வழக்கறிஞர் ஆகியோர் இன்று அவருக்கு பதிலாக ஆஜராகி விளக்கம் கொடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளதுConclusion:
Last Updated : Feb 10, 2020, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.