ETV Bharat / state

2 வீடுகள், 18 போட்டியாளர்கள்.. கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன்-7.. போட்டியாளர்கள் யார் யார்? - chennai district

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-ஆவது சீசன் கோலகலமாக தொடங்கியுள்ள நிலையில் அதில் கூல் சுரேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன், கண்ணம்மா, வனிதாவின் மகள் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கோலாகலமாக தொடங்கியது பிக் பாஸ் சீசன் 7: ஒரு வீடு அல்ல, 2 வீடுகள், 14 போட்டியாளர்கள் !

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 2:32 PM IST

Updated : Oct 2, 2023, 3:51 PM IST

சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். கடந்த ஆறு ஆண்டுகளாக வெற்றிக்கான நிகழ்ச்சியாக இருக்கும் இதன் 7-ஆவது சீசன் நேற்று தொடங்கியது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள், 100 நாட்கள் ஒரு வீட்டிற்குள் இருந்து எந்தவித வெளி மக்கள் தொடர்பும்‌ இல்லாமல் வாழ்ந்து வருவார்கள். பல்வேறு போட்டிகளின் முடிவில் ஒவ்வொருவராக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு, இறுதியில் முதலிடம் பிடிக்கும் ஒருவருக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படும்.

இந்த ஆண்டு சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பிக்பாஸ் வீடு இம்முறை இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கமல் சென்னைவாசியாக வீட்டுக்குள் நுழைந்து அதகளப்படுத்தினார்.‌ அவர் பேசிய சென்னை தமிழும் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது.‌

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள்

கூல் சுரேஷ்: வீட்டின் ஒவ்வொரு பகுதியாக சுற்றிக்காட்டிய அவர், அரங்கில் இருந்த மற்றொரு கமலுடன் லூட்டி அடித்தது பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக இருந்தது. அதனை தொடர்ந்து முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தார் கூல் சுரேஷ். சமீப காலமாக எந்த சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆஜராகி விடும் இவர், உள்ளேயும் கண்டென்ட் தருவார் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளருக்கு மாலை போட்டு சர்ச்சையில் சிக்கிய நிலையில், வீட்டிற்குள் சென்ற அவர் மற்றொரு போட்டியாளருக்கு பேண்ட் கட்டிவிடும் போது இல்லை நீங்களே காட்டிக்கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்.

பூர்ணிமா ரவி: அவரை தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களில் நடித்துள்ள யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவிக்கு கமல், விசிலை பரிசாக கொடுத்து அனுப்பி வைத்தார்.

ரவீணா: சினிமா, சீரியல் என மாற்றி மாற்றி நடித்து வந்த விஜய் டிவி பிரபலமான ரவீணா இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பிரதீப் ஆண்டனி: அருவி படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய பிரதீப் ஆண்டனி அப்படத்தின் இயக்குனர் இயக்கிய வாழ் படத்தில் நடித்திருந்தார். நடிகர் கவினின் நண்பரான இவர் உள்ளே சென்றதும் கேப்டன் பதவிக்காக செய்த செயல்கள் மற்றும் பேச்சு ரசிக்க வைத்தது. கடுமையான போட்டியாளராக வருவார் என்று பார்வையாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

வினுஷா தேவி: பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறியப்பட்டவர் வினுஷா தேவி. இவர் மேடையில் பேசும்போது தனது நிறத்தால் தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் பற்றி உருக்கமாக பேசினார். அவருக்கு இதுகுறித்து தன்னம்பிக்கை பாடம் எடுத்த கமல்ஹாசன் கருப்பு வைரத்தை பரிசாக கொடுத்து அனுப்பி வைத்தார்.

மணிச்சந்திரா: விஜய் டிவி ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் ஜெயித்த மணிச்சந்திராவும் உள்ளே சென்றுள்ளார்.

இதையும் படிங்க: Cauvery Water dispute: காவிரி விவகாரத்தில் தமிழ் நடிகர்கள் மவுனம் சாதிப்பது ஏன்? - விளாசும் நெட்டிசன்கள்!

அக்ஷயா உதயகுமார்: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் இவானாவின் தங்கையாக நடித்த அக்ஷயா உதயகுமார் பிக்பாஸில் பங்கேற்றுள்ளார்.

ஜோவிகா விஜயகுமார்: இவர் நடிகை வனிதாவின் மகள். இவரை நாயகியாக கொண்டுவர வேண்டும் என்பது வனிதாவின் ஆசையாக இருக்களாம், அதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி இருக்களாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐஷூ: பிக்பாஸ் பிரபலம் அமீரின் தங்கையான ஐஷூ திரைத்துறையில் வாய்ப்பு தேடி வருகிறார். இவருக்கு இந்த பிக்பாஸ் வீடு நல்ல களமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

விஷ்ணு விஜய்: விஜய் டிவி பிரபலமான விஷ்ணு விஜய் ஆபிஸ் தொடர் மூலம் பெண்களின் அபிமான நடிகராக வலம் வருபவர். அதனை தொடர்ந்து சத்யா தொடரில் மேலும் பிரபலமான இவர் இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். இவர் பெண் ரசிகைகளின் ஓட்டுகளை அதிகம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாயா: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளவர் மாயா, குறிப்பாக கமலின் விக்ரம் படத்தில் இவரது சீன் மிகவும் ரசிக்கப்பட்டது. தற்போது லியோ படத்திலும் இவர் நடித்துள்ளார். இவர் உள்ளே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்துவார் என்று பார்வையாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சரவண விக்ரம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் கண்ணனாக அறியப்பட்ட சரவண விக்ரமும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். கடைக்குட்டி எப்படி பல திமிங்கலத்துடன் சண்டையிட்டு நீந்துகிறது என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

யுகேந்திரன் வாசுதேவன்: பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் வாசுதேவன் ஏராளமான வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமின்றி நிறைய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு வெளிநாட்டில் வசித்து வந்தவரை பிக்பாஸ் வீடு அள்ளிக்கொண்டு வந்துள்ளது.

விசித்திரா: தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் கிளாமர் வேடங்களில் நடித்தவர் விசித்திரா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் நன்கு அறியப்பட்டவரான இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார்.

பவா செல்லத்துரை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஸ்வீட் சர்ப்ரைஸாக வந்தவர் பவா செல்லத்துரை. எழுத்தாளர், பேச்சாளர் என்று பன்முகத் திறமை படைத்தவரான இவர் இந்த வீட்டுக்குள் என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மக்கள்.

விஜய்: அதேபோல் மாடலிங் துறையில் இருந்து விஜய் என்பவரும் உள்ளே நுழைந்துள்ளார். இரண்டு வீடுகளில் 18 பேர் போட்டியிடப்போகும் இந்த நிகழ்ச்சி சுவாரசியமாக செல்லும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.‌

இதுமட்டுமின்றி இந்த சீசனில் புதுமையான விஷயமாக ஃபேன் ஜோன் என்ற ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் பகுதியில் பிக்பாஸ் தொடர்பான கேள்விகள் ரசிகர்களிடம் கேட்கப்படும். மேலும் பார்வையாளர்களிடம் கருத்துகளும் கேட்கப்படும். போட்டியாளர்களுக்கு இந்த வாரம் என்ன டாஸ்க் கொடுக்கலாம்,என்ன உணவு கொடுக்கலாம், இவரை சிறையில் அடைக்கலாமா, முட்டை தரலாமா, என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படும்.

பின்னர் பார்வையாளர்களின் கருத்துகள் போட்டியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போட்டியில் பார்வையாளர்களின் பங்களிப்பையும், சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 7 Years of M.S.Dhoni The Untold Story; மறைந்த சுஷாந்த்தை நினைவு கூர்ந்த நடிகை திஷா பதானி!

Last Updated : Oct 2, 2023, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.