சென்னை: ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் (Osaka Tamil International Film Festival) 2021ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது மாஸ்டர் படத்துக்காக நடிகர் விஜய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழின் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிப்பது வழக்கம். கடந்த ஆண்டு அதாவது 2020ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது சூரரைப் போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சிறந்த நடிகர் விருது விஜய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது விஜய்க்கு அந்த (மாஸ்டர்) படத்துக்காக சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இன்றி சிறந்த வில்லன் விருது விஜய் சேதுபதிக்கும் சிறந்த நடன இயக்குனர் விருது வாத்தி கம்மிங் பாடலுக்காக தினேஷ் மாஸ்டருக்கும் என மொத்தமாக மாஸ்டர் திரைப்படம் மூன்று விருதுகளை வென்றுள்ளது.
இதையும் படிங்க: Thalapathy68: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி - விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி!
சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக கங்கனா ரனாவத் தலைவி படத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநாடு படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதினை யுவன் சங்கர் ராஜா பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: இந்து - முஸ்லீம் சர்ச்சையை ஏற்படுத்துமா காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்? - இயக்குநர் முத்தையா கூறியது என்ன!
ஜெய்பீம் படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டன் பெற்றார். சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கர்ணன் படத்துக்காக தேனி ஈஸ்வருக்கு கிடைத்துள்ளது. சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது மாநாடு படத்துக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகை விருது ஜெய் பீம் படத்துக்காக லிஜோமோல் ஜோஸ் பெற்றார். இந்த விருதுகள் பட்டியல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்சியை யேற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மலேசியாவில் பிரம்மாண்டமாக தொடங்கிய விஜய் சேதுபதியின் புதிய படம்!