ETV Bharat / state

ஆண்களே உஷார்: முகநூலில் பெண் போல் பேசி பணம் பறிக்கும் மோசடி கும்பல்!

author img

By

Published : Aug 8, 2021, 6:27 PM IST

Updated : Aug 8, 2021, 6:36 PM IST

ஆண்களுக்கு முகநூல் மூலம் நட்பு வலைவீசி, வீடியோ காலில் அவர்களை நிர்வாணப்படுத்தி பதிவு செய்து பணம் பறிக்கும் மோசடி அரங்கேறுகிறது.

முகநூலில் உலா வரும் மோசடி கும்பல்
முகநூலில் உலா வரும் மோசடி கும்பல்

சென்னை: தமிழ்நாட்டில் நூதன முறையில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் முகநூல் மூலமாக பல்வேறு வகையிலான மோசடிகளும் அரங்கேறியிருக்கின்றன. குறிப்பாக ஆண்களை ஆபாச வலைக்குள் சிக்க வைத்து மிரட்டி பணம் பறிக்கும் ஒரு கூட்டம் முகநூல் பக்கங்களை கேடயமாக பயன்படுத்தி செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன்

இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் போலியான முகநூல் கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் முகநூலில் உள்ள பிரபலமான ஆண்களை தேர்வு செய்து அவர்களுக்கு முதலில் குறுஞ்செய்தி அனுப்பி நட்பு வலையை வீசுகின்றனர். அவர்களிடம் உரையாடும் அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை ஒரு பெண்போல் சித்தரித்து ஆசை வார்த்தைகள் கூறி சம்பந்தப்பட்ட ஆண்களின் தொடர்பு எண்களை பெற்று வாட்ஸ் ஆப் மூலம் உடனடியாக உரையாடத் தொடங்கி விடுகின்றனர்.

வீடியோ பதிவு செய்து மிரட்டல்

ஒன்றிரண்டு நாட்களுக்குள் ஆசை வார்த்தையாகவும், ஆபாச வார்த்தையாகவும் இருவருக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் அந்த நபர்கள் அடுத்தக்கட்டமாக வீடியோ காலில் அழைக்கின்றனர். வீடியோ காலில் தங்கள் கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை நிர்வாணமாக தோன்றவைத்து, எதிர் முனையில் பேசும் ஆண்களையும் நிர்வாணமாக்குகின்றனர்.

முகநூலில் உலா வரும் மோசடி கும்பல்
முகநூலில் உலா வரும் மோசடி கும்பல்

ஒரு கட்டத்தில் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அவர்களுடன் பேசும் ஆண்கள் நிர்வாணமாக அவர்களுடன் பேசப் பேச அதைப் பதிவு செய்துகொண்டு இணைப்பைத் துண்டித்துவிடுகின்றனர். பின்னர் தொலைபேசியில் அழைக்கும் அவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கேட்டு சம்மந்தப்பட்ட ஆண்களை மிரட்டத் தொடங்குகின்றனர். பணம் தரமாட்டேன் என கூறும் ஆண்களிடம் , தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு வீடியோ அனுப்பிவிடுவேன் என மிரட்டி பணத்தை செலுத்த நிர்பந்தப்படுத்துகின்றனர்.

ஒன்றல்ல, இரண்டல்ல குவியும் புகார்கள்

இந்நிலையில் இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து சைபர் கிரைம் காவல் துறையிருக்கு குவிந்த வண்ணம் உள்ளன. இப்புகார்களின் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் நான்கு பேர் 19 லட்ச ரூபாயை இழந்துள்ளனர் என்ற செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த ஆபாச வலைக்குள் சிக்கி மருத்துவர் ஒருவரும் பாதிக்கப்பட்டு சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

முகநூலில் உலா வரும் மோசடி கும்பல்
முகநூலில் உலா வரும் மோசடி கும்பல்

அதேபோல கல்லூரி மாணவர் ஒருவரும் இதே பாணியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கி, பெண் பெயரில் அந்த முகநூல் கணக்கு குறித்து முகநூல் நிறுவனத்திற்கு புகார் அளித்தார். இதற்கு பழிவாங்கும் விதமாக அந்த கல்லூரி மாணவரின் நண்பர்கள், தாய்க்கு அவர் பெண்ணோடு பேசும் நிர்வாண வீடியோவை அனுப்பிவிடுவேன் என மிரட்டியதையடுத்து பயந்துபோன அந்த மாணவர் அவர்கள் சொன்ன போன் பே எண்ணுக்கு 8 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். அதன்பின்தான் மோசடியில் சிக்கி கொண்டதை உணர்ந்து பெண்ணின் பெயரில் உலா வரும் அடையாளம் தெரியாத நபர் மீது புகாரை அளித்துள்ளார்.

17 லட்சம் ரூபாய் மோசடி

அதேபோல மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் இதில் பாதிக்கப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளார். மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் இதே பாணியில் ஏற்பட்ட மிரட்டலுக்கு பயந்து 1.93 லட்சம் ரூபாயும் உச்சபட்சமாக தியாகராய நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அவர்கள் கூறும் கணக்குகளுக்கு போன் பே, கூகுள் பே மூலம் சுமார் 17 லட்சம் ரூபாயும் அளித்து வந்துள்ளனர் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி இணையதளம்

இதுமட்டுமல்லாமல் மோசடி கும்பல்கள், தாங்கள் குறிவைத்த நபர்களுடன் பேசும்போது தாங்கள் ஒரு யூடியூப் சேனல் நடத்துவதாகவும், கிரைம் துறை காவலர்கள் என கூறி பணம் பறிக்கின்றனர். makemefriends.com என்ற இணையதளத்தின் மூலமாகவும் மோசடியில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு புகார்கள் குவிந்துவருகிறது. ஒவ்வொரு புகாரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவர்கள் பார்வை

மனதளவில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களும், சமூகத்தில் தங்களுக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்காதவர்களும்தான் இதுபோன்ற ஆபாச வலைகளில் எளிதில் சிக்கிவிடுகின்றனர். இந்த மோசடி கும்பலால் சுமார் 18 வயது முதல் ஏறத்தாழ 45 வயதுக்கு உள்பட்ட தரப்பினரே இலக்காவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பிரச்னை என்று அறிந்தவுடன் அதிலிருந்து வெளிவர முயல வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிக்காட்டாமல் உதவ, சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட உதவி மையங்கள் ஏராளமாக உள்ளன எனவும் மனநல மருத்துவர் வந்தனா தெரிவிக்கிறார்.

மோசடிக்குத் தீர்வு

இது போன்ற மோசடிகளில் சிக்கினால் சமூகத்திற்கு பயந்து புகார் அளிக்காமல் இருக்கக்கூடாது. உடனடியாக அருகிலுள்ள காவல் துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும் என கூறுகிறார் சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன். மேலும் பேசிய அவர், பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தரங்க வீடியோவை யாரும் பார்க்காதபடி உடனே சைபர் கிரைம் காவல் துறையினர் நீக்கிவிடுவார்கள். அந்த வீடியோவைப் பதிவேற்றம் செய்த நபருக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள்வரை தண்டனை கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

ஆசை வார்த்தைகளை நம்பி மோசடி கும்பல்களின் ஆபாச வலைகளில் சிக்க வேண்டாம் எனவும் இதுபோன்ற வீடியோ கால்கள் வந்தால் உடனடியாக துண்டித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: சைபர் கிரைம் மோசடிகள்: விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

Last Updated : Aug 8, 2021, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.