ETV Bharat / state

ஊரடங்கு: அலுவலகம் செல்ல வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை! - TN Bar council

சென்னை: பணிநிமித்தமாக வெளியில் வரும் வழக்கறிஞர்களை காவல்துறையினர் தடுக்கக் கூடாது என அரசுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.

bar council
bar council
author img

By

Published : Jun 17, 2020, 4:00 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கடிதம் எழுதியுள்ளார். அதில், ”உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதிகள் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாகவே வழக்குகளை விசாரித்து வருவதால், வழக்கறிஞர்களும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக வழக்கில் ஆஜராகி வருகின்றனர்.

வழக்கறிஞர்களின் அலவலகங்களில் வீடியோ கான்ஃபரன்சிங் வசதி ஏற்பாடு செய்திருப்பதால், ஜூன் 19ஆம் தேதியில் இருந்து ஜூன் 30ஆம் தேதி வரை அலுவலங்கள் செல்வதை காவல்துறையினர் தடுக்கக் கூடாது. தவிர்க்க முடியாத காரணங்களால் அலுவலகத்தை திறக்க செல்லும் வழக்கறிஞர்களிடம் பார் கவுன்சில் அடையாள அட்டையை காண்பிக்கும் பட்சத்தில் காவல்துறை அவர்களை அனுமதிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, தகுந்த இடைவெளி ஆகியவற்றை வழக்கறிஞர்கள் பின்பற்றுவார்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை ரத்து செய்ய மனு - மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.