ETV Bharat / state

ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவினை சோதனை செய்ய தேர்வு - பள்ளிக்கல்வித்துறை

author img

By

Published : Feb 8, 2022, 10:12 PM IST

தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு சோதனை செய்வதற்கான ஆன்லைன் தேர்வு நடத்தப்படயிருக்கிறது. மேலும் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் படித்து எழுதினால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வு
ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சி நடைபெறும் நாள்களில் ஆசிரியர்கள் சம்பளத்துடன் நேரடியாகப் பயிற்சியில் கலந்துக்கொள்வார்கள். அந்தப் பயிற்சியில் அவர்கள் கற்றுக் கொண்டது குறித்து எந்தவிதமான அளவீடுகளும் இல்லாமல் இருந்தது.

இதனால் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தாலும், மாணவர்களின் கல்வி கற்கும் திறனில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆசிரியர்கள் பயிற்சியை முழுமையாக கற்றுக் கொள்கின்றனரா? என்பதை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதல்முறையாக சான்றிதழ் உடன் கூடிய பயிற்சி அளிக்கிறது.

ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வு
ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வு

எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சி

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திறன் மேம்பாட்டுப்பயிற்சி வழங்குவதற்கு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டகங்கள் கொண்ட புத்தகத்தைத் தயார் செய்துள்ளது.

இதில் காணொலிகள், செயல்பாடுகள் மற்றும் மதிப்பீடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் ஒவ்வொரு கட்டகத்தின் இறுதியிலும் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படுவர்.

அதில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெற்றிருப்பின் அவர்களுக்கான சான்றிதழ் பெற்றுக் கொள்ள இயலும். நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை பெறாவிடில் மீண்டும் அந்த கட்டகத்தில் பயிற்சி பெறுதல் வேண்டும்.

ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வு

எண்ணும் எழுத்தும் பயிற்சிகள், ஆன்லைன் மூலம் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் கலந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் தங்களின் TNEMIS கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையத்தளத்தின் யூசர் ஐடி, பாஸ்வேர்டினைப் பயன்படுத்தி, இந்தப் பயிற்சியில் அவசியம் பங்கேற்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் 80 ஆயிரத்து 85 ஆசிரியர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 28 ஆயிரத்து 190 ஆசிரியர்கள் என 1 லட்சத்து 8 ஆயிரத்து 275 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர். ஒவ்வொரு கட்டகத்தின் முடிவிலும் ஆசிரியர்கள் ஒரு கொள்குறிவகை வினாடி வினாவிற்கு விடையளிக்க வேண்டும்.

இறுதி மதிப்பீட்டில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் பெறும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் தங்களுக்கான பங்கேற்பு சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

பயிற்சி சான்றிதழ்

ஆசிரியர் பயிற்சி நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடங்களை ஒவ்வொன்றாகக் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தின் முடிவிலும் அந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி பெறவில்லை என்றால், மீண்டும் பயிற்சி எடுத்து, தேர்ச்சி பெறும் வரையில் பயிற்சியைத் தொடர வேண்டும்.

ஒவ்வொரு பயிற்சியிலும் அசைன்மென்ட்ஸ் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான பாடங்கள் குறிப்பிட்ட நாள்கள் மட்டுமே இருக்கும். அதற்குள் ஆசிரியர்கள் அந்த கட்டங்களை நிறைவு செய்ய வேண்டும்.

இறுதியாக தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பயிற்சி நிறைவு செய்தமைக்கான சான்றிதழ் வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.