ETV Bharat / state

மழைக்காலங்களில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சிரமங்கள்!

author img

By

Published : Nov 3, 2022, 6:56 PM IST

மழைக்காலங்களில் மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து பல்வேறு மாற்றுத் திறனாளிகள் கூறுவது என்ன?... இக்கட்டுரையில் பார்க்கலாம்.

மழைக்காலங்களில் மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் சிரமங்கள்...!

தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். மேலும், உயிர் சேதங்களும் பொருள் சேதங்களும் ஏற்பட்டு உள்ளன.

இந்நிலையில், மழைக்காலங்களில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சிரமங்கள் சொல்ல முடியாத துயரம் நிறைந்தவை. மேலும் மாற்றுத்திறனாளிகளில், பார்வையற்றோர், முடக்கு வாதம் உள்ளிட்ட 21 வகையான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவ்வாறு உள்ள மாற்றுத்திறனாளிகள் மழைக்காலங்களில் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

ஏற்கெனவே இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் சாலைகளோ, கட்டட அமைப்புகளோ, கழிவறையோ இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் சென்னை போன்ற பெருநகரங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் அரசு மற்றும் தனியார் கட்டடங்களிலும் அணுகுதல் தன்மை இல்லாமல் உள்ளது என ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் அத்தியாவசியத்தேவையான கழிப்படை வசதி, அநேக இடத்தில் இல்லாமல் இருப்பது தான் இதில் மிகப்பெரிய வேதனை ஆகும். இப்படியாக மாற்றுத்திறனாளிகள் தினம் தோறும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தற்போது மழைக்காலங்களில் மாற்றுத்திறனாளிகள் வெளியே செல்வது என்பது சவாலான காரியமாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நலனில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றன என மாற்றுத்திறனாளிகள் வேதனைத் தெரிவிக்கின்றன.

தற்போது வடகிழக்குப் பருவமழைத்தொடங்கி மூன்று நாட்கள் ஆகி உள்ளது. இந்த காலகட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சொல்ல முடியாத துயர நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர். மேலும், எத்தனை மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு அரசும் மாற்றுத்திறனாளிகள் ஆணையரும் இதனை கண்காணிக்க வேண்டும். மேலும், எத்தனை மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்ய முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர் என்றும்; பேரிடர் காலத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் கண்டறியப்பட வேண்டும்.

மேலும், இதுவரையிலும் அரசு சார்பிலும் அமைச்சர்களும் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து இதுவரை பேசாமல் உள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகளின் துறை முதலமைச்சரிடம் உள்ளதால் அவர் இதில் உடனடியாக தலையிட்டு பேரிடர் காலத்தில் பாதிப்பு அடையும் மாற்றுத்திறனாளிகளைக்கண்டறிந்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கேட்டுக்கொண்டனர். மேலும், இதுவரையில் தமிழ்நாட்டில் எத்தனை மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பு எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

எந்தெந்த பகுதியில் எந்தெந்த மாதிரியான மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள் என்றும், எத்தனை மாற்றுத்திறனாளிகளிடம் அடையாள அட்டை உள்ளது என்றும் கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலானோர் ரயில்கள், மற்றும் கடைகளில் பொருட்களை விற்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.

தற்போது இந்தப்பேரிடர் காலத்தில் அவர்கள் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் சிக்கித்தவித்து வருகின்றனர். இவர்களைப் பற்றி யாரும் பேசாதது வருத்தத்தைத் தருகிறது எனவும்; மேலும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். எனவே, பேரிடர் காலத்தில் சிக்கித்தவிக்கும் மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கேட்டுக்கொண்டனர்.

தற்போது மழைக்காலத்தில் வெளியே செல்ல முடியாததால் மூன்று நாட்கள் வீட்டில் உள்ளதாகவும் அரசு தங்களுக்கு உதவ வேண்டுமென, சுண்ணாம்பு கோட்ரஸ் பகுதியைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டும் மாற்றுத்திறனாளி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

மழைக்காலங்களில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் சிரமங்கள்!

தற்போது தமிழ்நாட்டில் சுமாராக 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகத்தகவல் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. இவர்களின் சிரமங்களை நீக்க வழிவகை செய்யுமா தமிழ்நாடு அரசு என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை? - சிவசங்கர் பாபா பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.