ETV Bharat / state

பி.இ., பி.டெக் படிப்புக்கான விண்ணப்பத்திற்கு  மற்றவர் தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்! - B.Tech

சென்னை: பி.இ., பி.டெக் படிப்புக்கான விண்ணப்பத்திற்கு மற்றவர் தொலைபேசி எண்ணை கொடுக்க வேண்டாம் என, தொழில்நுட்ப இயக்குனரகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொழில்நுட்ப இயக்குநரகம்
author img

By

Published : May 1, 2019, 8:57 PM IST

Updated : May 2, 2019, 9:42 AM IST

பி.இ., பி.டெக் படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இன்று தொடங்கி , மே 31 ஆம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில்நுட்ப இயக்குனரகம் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதில், "பி.இ., பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மாணவரின் பெயர், மாணவரின் மின் அஞ்சல், தொலைபேசி எண், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீடு வேண்டுமானால் அதற்கான விவரங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் செலுத்தலாம் அல்லது தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி சேர்க்கை மையத்தில் வங்கி வரைவோலை(டி.டி) அளிக்கலாம்.

அனைத்து தகவல்களுக்கும் மாணவர்கள் அளிக்கும் தொலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும். எனவே மற்றவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் அளிப்பதை மாணவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பி.இ., பி.டெக். படிப்பு விண்ணப்பத்திற்கு
 மற்றவர் செல்போன் எண் கொடுக்காதீர் 

சென்னை, 
 
 பி.இ, பி.டெக். பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவரின் பெயர், மாணவரின் இமெயில் ஐடி, செல்போன் எண், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீடு வேண்டுமானால் அதற்கான விபரங்கள், விண்ணப்பக்கட்டணமாக பொதுப்பிரிவினர் 500 ரூபாயும், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ வகுப்பினர் 250 ரூபாயும் கட்டணமாக ஆன்லைன் மூலம் டெபிட்,கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் செலுத்தலாம். தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி சேர்க்கை மையத்தில் வங்கி வரைவோலை(டி.டி) அளிக்கலாம். 
மாணவர்கள் விருப்பப்பட்டால் தங்களின் ஆதார் எண்ணை அளிக்கலாம். பெற்றோர்களின் ஆண்டு வருமான விபரம், மாணவர்கள் 8 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் படித்த பள்ளியின் விபரம், இருப்பிட சான்றிதழ் தேவைப்படுபவர்கள், உதவித் தொகை விபரம், முதல் பட்டதாரி கல்வி கட்டணச் சலுகை, எஸ்.சி, எஸ்சிஏ, எஸ்டி அல்லது எஸ்.சி,எஸ்சிஏ ஆகிய பிரிவினர் கிருத்துவ மதம் மாறினால் அவர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகை, கல்விக் கட்டண விலக்கு போன்ற விபரங்களை வைத்திருந்தால் எளிதாக பதிவு செய்யலாம். மேலும் விண்ணப்பம் செய்வதற்கான டேட்டா ஷீட் பயன்படுத்தவும். 

மாணவர்கள் தங்களுக்கான இமெயில் ஐடியை தனியாக பயன்படுத்தினால் நல்லது.  தற்பொழுது பயன்பாட்டில் உள்ள மாணவர்களின் பெற்றோர் அல்லது மாணவர் பயன்படுத்தக்கூடிய  செல்போன் எண்ணை மட்டும் அளித்தால் சரியாக இருக்கும். முக்கியமாக அனைத்து தகவல்களுக்கும் மாணவர்கள் அளிக்கும் செல்போன் எண் மற்றும் இமெயில் முகவரிக்கு மட்டும் அனுப்பி வைக்கப்படும். கடிதம் மூலம் தகவல்கள் அனுப்படாது. எனவே மற்றவர்களின் செல்போன் எண், இமெயில் ஐடியை அளிப்பதை தவிர்க்க வேண்டும். 

Last Updated : May 2, 2019, 9:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.