ETV Bharat / state

இரண்டு நாட்களாக வெளியாகாத உடற்கூறாய்வு அறிக்கை - தனியார் மருத்துவமனையுடன் பேரம்? - road roko

சென்னை: தவறாக ஊசி போட்டு மரணம் அடைந்ததாகக் கூறப்படும் பெண்ணின் உடற்கூறாய்வு அறிக்கை இரண்டு நாட்களாக வெளியாகாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நித்யாவின் தாயார் உறவினர்களுடன் போராட்டம்

author img

By

Published : Nov 29, 2019, 9:10 PM IST

சென்னை பல்லாவரம் அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா(23). இவர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வேலை தேடி வந்தார். இந்நிலையில் நித்யாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தாயுடன் அனகாபுத்தூரில் உள்ள ஜெயம் என்ற தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர் சுஜாதா கருணாகரன் என்பவர், நித்யாவை பரிசோதித்து ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட அடுத்த சில நிமிடங்களில் மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்த நித்யாவை, அருகில் உள்ள ஜெயின் மருத்துவமனையில் சேர்க்கும்படி அங்கிருந்த மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். அந்த மருத்துவர் அங்கும் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.

நித்யாவின் தாயார் அவரை அழைத்துக் கொண்டு அங்கு சென்றுள்ளார், அங்கிருந்த காவலாளி அனுமதிக்க மறுத்ததால், நித்யாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நித்யாவை பரிசோதனை செய்த மருத்துவர், நித்யாவின் உயிர் பிரிந்து அரை மணி நேரமாகி விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதைக் கேட்டு நித்யாவின் தாயார் கதறி அழுதார்... மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் தனது பெண் இறந்துவிட்டதாக நித்யாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

நித்யாவின் தாயார் உறவினர்களுடன் போராட்டம்

இது குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் நித்யாவின் தாயார் புகார் அளித்துள்ளார். ஆனால் இச்சம்பவம் சங்கர் நகர் காவல்துறைக்கு உட்பட்ட அனகாபுத்தூர் தனியார் மருத்தவமனையில் நடந்ததால் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியிருக்கின்றனர்.

பின்னர் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் சங்கர்நகர் காவல் துறையினர் புகாரை ஏற்கவில்லை, இதனால் ஆத்திரமடைந்த நித்யாவின் தாயார் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டாம் நடத்தினர்.

இதையடுத்து காவல் துறையினர் உடற்கூறாய்வுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்பு போராட்டம் கைவிடப்பட்டது. உடற்கூறாய்வு செய்வதற்கு போதிய வசதி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இல்லாததால், ராஜிவ் காந்தி அரசு மருத்துமனையில் உடற்கூறாய்வு செய்யப்படும் என காவல்துறை தெறிவித்தது. பின்னர் நித்யாவின் உடல் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற்கூறாய்வு முடிவு வந்தவுடன் துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர்.

தனியார் மருத்துவமனையுடன் பேரம் நடக்கிறதா?

இதுவரை, காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், நித்யாவின் உறவினர்கள் அனகாபுத்தூரில் உள்ள ஜெயம் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டு நாட்கள் ஆகியும் உடற்கூறாய்வு முடிவு தெரிவிக்கப்படவில்லை எனவும், தன் மகளுக்கு ஊசி போட்ட மருத்துவர் சுஜாதா கருணாகரனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நித்யாவின் தாயார் உறவினர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார். சுகாதாரத்துறை அலட்சியம் காட்டாமல் இதுபோன்ற மருத்துவமனைகளை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

பின்னர் பரங்கிமலை காவல் துணை ஆணையர், நித்யாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடற்கூறாய்வு அறிக்கை வந்த உடன் தவறான ஊசி போட்டுதான் நித்யா இறந்தார் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதியளித்ததின்பேரில், போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Intro:தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் 23 வயது பெண் உழிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் சாலைமறியல்Body:தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் 23 வயது பெண் உழிரிழப்பு

சென்னை பல்லாவரம் அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா(23) இவர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வேலை தேடி வருகிறார்,

இந்நிலையில் நித்யாவிற்க்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அவரது பெற்றோர்களுடன் அனகாபுத்தூரில் உள்ள ஜெயம் என்ற தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு சென்ற போது அங்கிருந்த மருத்துவர் சுஜாதா கருணாகரன் நித்தியாவை பரிசோதித்து ஊசி போட்டுள்ளார்...

ஊசி போட்ட சில நிமிடத்தில் நித்யா மருத்துவமனையிலே மயங்கி கீழே விழுந்துள்ளார் பின்னர் அங்கிருந்த மருத்துவர் நித்யாவை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்..

அதிர்ச்சி அடைந்த நித்யாவின் பெற்றோர்கள் நித்யாவை அழைத்து கொண்டு வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் அங்கும் நித்யாவிற்க்கு சிகிச்சை அளிக்காமல் மீண்டும் அவர்களை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி அலச்சியமாக கூறியுள்ளனர்..

அங்கிருந்து நித்யாவை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அங்கு நித்யாவை பரிசோதனை செய்த மருத்துவர் நித்யாவின் உயிர் பிரிந்து அரை மணி நேரமாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர் அதை கேட்டு நித்யாவின் பெற்றோர்கள் கதறி அழுதனர்...மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் தங்களது பெண் இறந்துவிட்டதாக நித்யாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்

இது குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் நித்யாவின் பெற்றோர் தன் மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர். அனால் இச்சம்பவம் சங்கர் நகர் காவல்துறைக்கு உட்பட்ட அனகாப்புத்தூர் தனியார் மருத்தவமையில் நடந்ததால் சங்கர்நகர் காவல் நியையத்தில் புகார் அளிக்கும்படி கூறியிருக்கின்றனர்

பின்னர் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் ஆனால் சங்கர்நகர் காவல்துறையினர் புகாரை ஏற்க்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டாம் நடத்தினர்.

இதையடுத்து காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்பு போராட்டம் கைவிடப்பட்டது

பின்னர் உடற்கூறு ஆய்வு செய்வதற்கு போதிய வசதி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் இல்லாததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தெறிவித்தது. பின்னர் உடலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உடற்கூறு ஆய்வு முடிவு வந்தவுடன் துறை ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர்

இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நித்யாவின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் அனகாபுத்தூரில் உள்ள ஜெயம் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இரண்டு நாட்கள் ஆகியும் உடற்கூறு ஆய்வு முடிவு தெறிவிக்கவில்லை எனவும் தன் மகளுக்கு ஊசி போட்ட மருத்துவர் சுஜாதா கருணாகரனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சுகதாரத்துறை அலட்சியம் காட்டாமல் இதுபோன்ற மருத்துவமைகளை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

பின்னர் பரங்கிமலை துணை காவல் ஆணையர் நித்யாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த உடன் தவறான ஊசி போட்டு தான் நித்யா இறந்தார் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் துணை காவல் ஆணையர் கூறினார் இதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது

இச்சம்பவத்தினால் அனகாப்புத்தூர் பேருந்து நிலையம் அருகே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.