ETV Bharat / state

சென்னையில் காவலர் அருண்குமார் தற்கொலை; விரக்தியில் வெளியிட்ட ஆடியோ வெளியீடு! - policemen suicide in chennai

கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது சென்னையில் காவலர் அருண்குமார் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவத்தில் தற்கொலை செய்துக்கொண்ட அருண்குமார் உயிரிழப்பதற்கு முன்னர் மன விரக்தியில் பேசி ஆடியோ வெளியாகியுள்ளது.

டி.ஐ.ஜி விஜய்குமாரைத் தொடர்ந்து சென்னையில் காவலர் அருண் தற்கொலை

author img

By

Published : Jul 10, 2023, 7:29 PM IST

காவலர் அருண்குமார் பேசிய ஆடியோ

சென்னை: விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார்(27). இவர் சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் முதல் தெருவில் நண்பர்களுடன் தங்கி சென்னை ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். அருண்குமார் பல ஆண்டுகளாக பிரியா என்பவரை காதலித்து, கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டார். பிரியா திருநெல்வேலி மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அயனாவரத்தில் தங்கி வந்த காவலர் அருண்குமார், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில், இன்று காலை பணியிலிருந்து சீக்கிரமாக வீட்டிற்கு சென்று, தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடன் அறையில் தங்கி வந்த புஷ்பராஜ் என்பவர் அயனாவரம் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காவலர் அருண்குமாரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து காவல் துறையினர் முதல் கட்ட விசாரணையாக அருண்குமார் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். சோதனையின் போது அருண்குமார் எழுதி வைத்த கடிதத்தை அவரது அறையில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர். அந்த கடிதத்தில், "நானாக தேடிக் கொண்ட வாழ்க்கை நல்ல முறையில் செல்லவில்லை. அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் என்றும், தொடர்ச்சியாக தனது மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில், தனது மனைவி தன்னை ஆபாசமாக பேசி வந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என உருக்கமாக கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அருண்குமாரின் திருமணம் நடைபெற்ற போது 10 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்ததும், அதன் பிறகு விடுமுறை கிடைக்காமல் இருந்ததால் மனைவியை சந்திக்க முடியாது நிலை ஏற்பட்டதால், கணவன் - மனைவி இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு ஒருகட்டத்தில் பூதாகரமாக வெடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அருண்குமாரின் தாய் மற்றும் தந்தையை கவனிக்ககூடாது என்று மனைவி பிரியா அருண்குமாருடன் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை ஆபாசமாக திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அருண்குமார் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தற்கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லீவு கொடுக்காததால் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு, அருண்குமார் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வந்த போலீசாருக்கு தற்போது, அருண்குமாரின் ஆடியோ வெளியாகி விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

திருமணத்திற்கே 10 நாட்கள் மட்டுமே லீவு கிடைத்ததாகவும், அதன் பிறகு விடுமுறை கிடைக்கவில்லை இருவரும் தனிதனியாக வாழ்ந்து வருவது ரொம்ப கஷ்டமாக இருப்பதாக அருண்குமார் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கோவையில் டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது சென்னையில் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கூடுதலாக 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை - முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.