சென்னை: தாம்பரம் மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு தற்போது கழிவு செய்யப்பட்டு, 109 இருசக்கர வாகனங்கள் தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் வரும் 17ஆம் தேதி பொது ஏலம் விடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், ”இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஏலதாரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் GST பதிவு எண் ஆதாரங்களுடன் தாம்பரம் மாநகர காவல், ஆயுதப்படை வளாகத்தில் 15.05.2023 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் மணிக்குள் வந்து முன்பதிவு கட்டணம் ரூபாய் 1000 செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் பதிவு செய்த ஏலதாரர்கள் ஏலக்குழுவினர் முன்னிலையில், 17.05.2023 அன்று காலை 10.00 மணிக்கு தாம்பரம் மாநகர காவல் ஆயுதப்படை வளாகத்தில் நடக்கும் பொது ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: 'கிரவுண்ட்க்கு வெளியே உட்கார்ந்து நிறைய கமெண்ட் அடிக்கலாம்... ஆனால்' - KGF ஸ்டைலில் டிஆர்பி ராஜா பேட்டி
மேலும், பதிவு செய்த நபர்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான ஏலத்தொகையை அன்றைய தினமே நூறு சதவீதம் செலுத்த வேண்டும். மேலும் அதற்கான GST கட்டணத்தை செலுத்தியப் பின்பு விற்பனை ஆணை வழங்கப்பட்டு ஏலம் எடுத்த வாகனங்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர்’’ என தாம்பரம் காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழைய பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ரூ.1 ஊக்கத்தொகை - நெல்லை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்!