ETV Bharat / state

சிலிண்டரில் தீ வைத்து தற்கொலை முயற்சி: குழந்தைகள் உயிரிழப்பு; தாய் மருத்துவமனையில் அனுமதி! - காவல்துறையினர் விசாரணை

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் படுக்கை அறையில் சிலிண்டருக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Attempted suicide by setting fire to cylinder: infant mortality; Mother admitted to hospital!

author img

By

Published : Feb 7, 2021, 12:09 PM IST

பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹன்சூர் (40). இவர் சென்னை மணலியில் உள்ள சின்னசேக்காடு பகுதியில் இரும்பு மற்றும் பழைய பொருட்களை வியாபாரம் செய்துவருகிறார். இவர் புதுவண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள ஒரு தனியார் குடியிருப்பில் மனைவி ரிம்ஜிம் (28) மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில் ரிம்ஜிம் நேற்று (பிப்.06) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையிலிருந்த சிலிண்டரை படுக்கை அறைக்கு எடுத்து வந்து தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இந்த விபத்தில் அவரது நான்கு வயது குழந்தை மற்றும் 8 மாத குழந்தையும் சிக்கினர்.

பின்னர் வீட்டில் தீப்பிடித்திருப்பதை கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 4 வயது குழந்தையும், 8 மாத குழந்தையும் உயிரிழந்த நிலையில் ரிம்ஜிம் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குழந்தையை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 22 பேர் சிக்கினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.