ETV Bharat / state

அரியவகை உயிரினங்கள் கடத்தல்; பாங்காங்கில் இருந்தபடியே சென்னை இளைஞரை தீர்த்து கட்ட பிளான்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 3:26 PM IST

செல்லப் பிராணி விற்பனை கடை நடத்தி வரும் நபர் மீது அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: புரசைவாக்கம் சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கொளத்தூர் பகுதியில் செல்ல பிராணிகளான பறவைகள், மீன்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணர் ஜெயந்தி பண்டிகையன்று பிரகாஷ் தனது கடையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றார். அப்போது, வீட்டு வாசலில் வைத்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி சாய்த்தனர். இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த பிரகாஷ் நான்கு இடங்களில் வெட்டு காயம்பட்டு சரிந்து விழுந்துள்ளார். வெட்டிய நபர்கள் தப்பிச் செல்லும் போது துரோகம் செய்கிறாயா எனக்கூறி அரிவாளை பொதுமக்கள் மத்தியில் சுழற்றியபடி தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேப்பேரி காவல் துறையினர், பிரகாஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிரகாஷ் வழக்கமாக தனது மாருதி சுவிப்ட் காரில் தான் செல்வார். நேற்று (செப்டம்பர் 7ஆம் தேதி) தெருவோரம் நின்ற காரின் முன்பக்க சக்கரத்தின் காற்று இறங்கிய காரணத்தால் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது தான், இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஆகையால், கொலையாளிகளே திட்டம் தீட்டி காரின் சக்கரத்தில் காற்றி இறக்கி, பிளான் செய்து இந்த கொலையை செய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

காவல் துறையினரின் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்த கொலை சம்பவமானது குரங்கு கடத்தல் கும்பலின் பின்னணியில் நடந்தது தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பிரகாஷ், தாய்லாந்து போன்ற பிற நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் அரிய வகை உயிரினங்களை விற்பனை செய்து வந்திருக்கிறார். அதன்படி பாங்காங்கில் மதன் என்பவர் அரிய வகை உயிரினங்களை அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தும் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தாய்லாந்து, பப்புவா நியூகினியா போன்ற நாடுகளில் இருந்து அரிய உயிரினங்களை சட்டவிரோதமாக கடத்தி சென்னையில் விற்கும் இந்த கும்பலுடன் பிரகாஷும் ஈடுபட்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவ்வாறு பாங்காங் மதன் மூலம் நான்கு அரிய வகை உரங்குட்டான் குரங்குகள் கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை பிரகாஷ் வாங்கி ஆந்திராவிற்கு கொண்டு செல்லும்போது பாடியநல்லூர் சோதனைச் சாவடி அருகே செங்குன்றம் காவல் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அப்போது, உதவி ஆய்வாளர் அசோக் உள்பட வல்லரசு, மகேஷ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய காவல் துறையினரும், குரங்கு கடத்தல் கும்பலிடம் பேரம் பேசி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் பெற்றுக் கொண்டு அவர்களை தப்ப வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. தற்போது சம்பந்தப்பட்ட நான்கு காவல் துறையினரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனிடையே பாங்காங்கில் உள்ள கடத்தல் கும்பல் தலைவன் மதனுக்கும், மண்ணடியைச் சேர்ந்த பெரோஸ் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருப்பதாகவும், அதனால் மதன் தனக்கு தர வேண்டிய பணத்திற்கு ஈடாக தற்பொழுது மதன் அனுப்பிய நான்கு அரிய வகை உரங்குட்டான் குரங்குகளையும் தன்னிடம் கொடுக்க வேண்டும் என கேட்டு பிரகாஷிடம் மண்ணடி பெரோஸ் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. குரங்குகளை விற்ற விவகாரத்தில் பிரகாஷ் தன்னிடம் இரட்டை வேடம் போடுவதாக நினைத்த மதன், தான் உத்தரவிட்ட வாடிக்கையாளருக்கு குரங்குகளை அனுப்பாமல் வேறு ஒரு நபருக்கு விற்றதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த பாங்காங் மதன் அங்கிருந்தபடியே கூலிப்படைகளை ஏவி பிரகாஷை தீர்த்துக்கட்ட உத்தரவிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நடுரோட்டில் பேருந்தை மடக்கி ரகளை.. ஓட்டுநர் - நடத்துநருக்கு அடி உதை - வீடியோ வைரல்!.. என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.