சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த கொரியா் பார்சல்களை சென்னை விமான நிலைய சரக்கக சுங்கத் துறை அலுவலகத்தில், சுங்க அலுவலர்கள் ஆய்வுசெய்தனர். அதில் சிங்கப்பூரில் உள்ள ஒரே முகவரி இருந்த அந்த ஐந்து பாா்சல்களில் புடவை, சட்டை, சுடிதார் போன்ற ஆடைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
அலுவலர்களுக்கு அந்த பாா்சல்கள் மீது சந்தேகம் ஏற்படவே, அதனைத் தனியே எடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது அந்தப் பார்சல்களிலிருந்த சென்னை முகவரிகள் போலியானவை என்று தெரியவந்தன.
அவா்கள் புகைப்படக் கலைஞா்கள் என்று தெரியவந்துள்ளது, மேலும் விசாரணையில் இந்தப் பணம் ஹவாலா பணம் என்று தெரியவரவே பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இச்சம்பவம் சென்னை விமான நிலைய சரக்ககப் பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 15 லட்சம் கோடி ரூபாய்க்கு உரிமையாளரான அமேசான் ஜெஃப் பெசோஸ்