ETV Bharat / state

'கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்க வாய்ப்பு' - பேரவை தலைவர் தனபால்! - கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை நடத்த வாய்ப்பு

சென்னை: கரோனா தொற்றின் காரணமாக கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவையை நடத்துவதற்காக, சபாநாயகர் தனபால் அரங்கை ஆய்வு செய்தார்.

'கலைவாணர் அரங்கில் சட்டசபை நடக்க வாய்ப்பு'-பேரவை தலைவர் தனபால்!
Chennai kalaivanar hall
author img

By

Published : Aug 23, 2020, 2:35 AM IST

தமிழ்நாட்டில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் வகையில், மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவுற்றது.

கரோனா காரணமாக தமிழ்நாட்டில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது கரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையை நடத்த போதுமான இடவசதி இல்லை.

எனவே, நெருக்கடியான இடத்தில் சட்டப்பேரவை நடத்துவதைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. வருகின்ற மாதத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றால் அங்கு 234 உறுப்பினர்கள் அமர்வது மட்டுமல்ல 256 துறைகளின் செயலர்கள், அதன் ஊழியர்கள் என ஆயிரம் பேருக்கு மேல் அமர வேண்டும்.

பத்திரிகையாளர்கள், உயர் அலுவலர்கள், காவலர்கள் என நூற்றுக்கணக்கில் ஒரே இடத்தில் குவியும் நிலை ஏற்படும், வாகனங்கள் நிறுத்த இடம் வேண்டும். இதுபோன்ற பல பிரச்னைகள் உள்ளன.

இதனால் சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த அரசு திட்டமிட்டு வருகிறது. மூன்றாவது தளத்தில் டேபிள் சேர்கள் அமைத்து காற்றோட்டமான வசதியுடன் இடைவெளிவிட்டு கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன், சபாநாயகர் தனபால் ஆகியோர் கலைவாணர் அரங்கில் ஆய்வு நடத்தினர். பேரவையை நடத்துவதற்கு போதுமான இடவசதி உள்ளதா, காற்றோட்ட வசதி உள்ளதா, எந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது குறித்து இருவரும் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனபால் கூறுகையில், "சட்டப்பேரவை கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கத்தில் நடத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இதுவரை அதுகுறித்து முடிவு எடுக்கவில்லை, இறுதி முடிவு எடுக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.