சென்னை அரும்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தேவி. இவருடைய கணவர் ரமேஷ், பல வருடங்களாக கொடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவி கடந்த மூன்று ஆண்டுகளாக தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அப்போதும் ரமேஷ் அவரது வீட்டுக்கு மாதத்திற்கு ஒருமுறை வந்து செல்வது வழக்கம். அதேபோல் நேற்று அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவியிடம் ஆதார் ஆதார் கார்டை தருமாறு கேட்டுள்ளார். அப்போது திடீரென்று வீட்டின் கதவை மூடி அவரது மனைவியை சரமாரியாக கத்தியை வைத்து தாக்கியுள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தவுடன் அந்த கத்தியை வைத்து தன்னையும் வெட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் படுகாயமடைந்த இரண்டு பேரையும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி தேவி உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.