ETV Bharat / state

’இந்தத் தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும்’ - ஓவைசி - அசாருதீன் ஓவைசி செய்தியாளர் சந்திப்பு

இந்தத் தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரின் அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வரும் என தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்த்துள்ளார்.

இந்த தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் - ஓவைசி

author img

By

Published : Mar 26, 2021, 7:36 AM IST

ஆர்கே நகர் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் காளிதாஸை ஆதரித்து ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி திறந்தவெளி ஆட்டோவில் நின்று வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு மக்கள் நடப்பு அரசியலை நன்கு அறிந்தவர்கள். நல்லவர்களுக்கு அவர்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள். அந்த வகையில் அமமுக தலைமையிலான கூட்டணியை நிச்சயம் மக்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவின் பி டீம் என எங்களைப் பார்த்து கூறுபவர்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வாக்கெடுப்பின்போது நான் உள்பட ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம். ஆனால் காங்கிரஸ், திமுக அதனைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தது ஏன்? இதற்கு இவர்களால் விளக்கம் அளிக்க முடியுமா?

அசாருதீன் ஓவைசி பரப்புரை
தங்களை இஸ்லாமிய மக்களின் பாதுகாவலர்கள் என காட்டிக் கொள்ளும் இவர்கள் ஏன் எதிர்த்து வாக்களிக்கவில்லை? பாஜகவுடன் கூட்டணி வைக்கும் அனைவரும் தோல்வியைத் தழுவுவார்கள்" என்றார்.
மேலும் பேசிய அவர், ”இந்தத் தேர்தலோடு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரின் அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வரும். டிடிவி தினகரன், தமிழ்நாடு அரசியலை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். அரசியலில் மாபெரும் உச்சம் பெறுவார். அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது” என்றும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.