ETV Bharat / state

'திமுக ஆட்சியைக் கலைக்க குடியரசுத்தலைவரிடம் மனு அளிப்போம்’ - அர்ஜூன் சம்பத்

சென்னை விமான நிலையத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

’திமுக ஆட்சியை கலைக்க குடியரசு தலைவரிடம் மனு அளிப்போம்’ - அர்ஜூன் சம்பத்

author img

By

Published : Apr 21, 2022, 8:17 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, 'தருமபுர ஆதீன நிகழ்ச்சிக்குச் சென்ற ஆளுநருக்கு பல்வேறு நெருக்கடிகள் தரப்பட்டன. ஆளுநர் செல்லக்கூடிய நேரத்தைத்தெரிந்து வேண்டுமென்றே அந்த இடத்தில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி, ஆளுநர் சென்ற கான்வாயின் மீது அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மன்னிப்புக்கேட்க வேண்டும்: அத்தோடு ஆளுநருக்கே பாதுகாப்பில்லாத சூழல் என்று இச்சம்பவம் குறித்து அண்ணாமலை தெரிவித்தது நியாயமானது. ஆனால், முதலமைச்சர் மன்னிப்புகேட்காமல், அதை நியாயப்படுத்தி தவறான தகவலைத்தெரிவித்து வருகின்றார். மேலும், தமிழ்நாட்டில் திமுகவால் வன்முறை, பிரிவினைவாதம், கொலை சூழல் நிலவுவதோடு 10 மாத ஆட்சியில் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

’திமுக ஆட்சியைக் கலைக்க குடியரசுத் தலைவரிடம் மனு அளிப்போம்’ - அர்ஜூன் சம்பத்

கடுமையான மின் வெட்டால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் நிர்வாகம் தெரியாத இந்த ஆட்சியை மத்திய அரசு நடவடிக்கை எடுத்து 356 சட்டத்தின்கீழ் கலைக்க வேண்டுமென குடியரசுத்தலைவரிடம் மனு அளிக்கவுள்ளோம்.

மேலும், அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி நடைமுறைபடுத்துபவர், பிரதமர் மோடி என்பதால் அம்பேத்கருடன் மோடியை இளையராஜா ஒப்பிட்டது மிகச் சரியானது. திருமாவளவன் ஒரு பெரியாரிஸ்ட். ஆனால் அம்பேத்கரிஸ்ட் அல்ல. அம்பேத்கர் கொள்கைகளுக்கு துரோகம் செய்யக்கூடியவர்' எனக் கூறினார்.

இதையும் படிங்க: அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கங்கள்: மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.