ETV Bharat / state

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லையா? - அதிர்ந்த ஆசிரியர்களுக்கு அமைச்சரின் பதில்! - tamilnadu schools re opening

வரும் கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லையா? அதிர்ந்த ஆசிரியர்களுக்கு அமைச்சரின் பதில்!

author img

By

Published : May 25, 2022, 4:26 PM IST

சென்னை: இன்று (மே 25) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 23 வகை சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம் தொடர்பான நிகழ்வு நடைபெற்றது.

இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “வரும் கல்வியாண்டில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டுமெனில், சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்தித்தான் ஆக வேண்டும். எனவே, சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு வேலை நாள் தான்” எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், கரோனா காலகட்டம் என்பதால் பாடத்திட்டங்களை விரைவாக நடத்தி முடிக்க வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை என அறிவிக்கப்பட்டது. ஆனால், வரும் கல்வியாண்டில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் தெரிவித்த நிலையில், சனிக்கிழமை மட்டும் வேலை நாள் என்பது சில கேள்விகளை ஆசிரியர்கள் முன்னால் எழுப்பியுள்ளது.

சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லையா? அதிர்ந்த ஆசிரியர்களுக்கு அமைச்சரின் பதில்!

எனவே, இதுகுறித்து உடனடியாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு தலைவர் அருணன் உள்ளிட்டோர், அமைச்சரிடம் பேசினர்.

இதனையடுத்து, “சனிக்கிழமைகளில் வழக்கம்போல் பள்ளிகளுக்கு விடுமுறை. எனவே வரும் கல்வியாண்டில் வழக்கம்போல் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வேலை நாட்களாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.