ETV Bharat / state

வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு

author img

By

Published : Jul 2, 2020, 8:33 AM IST

சென்னை: வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு
தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை (வயது) முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் 2020-2021 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2020 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் வலைத்தளம் வாயிலாக (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள், தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.2 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 கட்டணமில்லா பேருந்துச் சலுகையும் அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள், மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக அனுப்பப்பட வேண்டும்.
சென்னை மாவட்டத்தில் வசிப்பவர்கள், சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பப்பெறலாம். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.9.2020 ஆகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.