ETV Bharat / state

'சமூக விரோதிகளைக் கைதுசெய்ய வேண்டும்' - ஆணையரிடம் புகார்

சென்னை: டெல்லியைப் போல் சென்னையும் கலவரத்தால் பற்றி எரியும் என்று கூறிய சமூக விரோதிகளைக் கைதுசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் சார்பில் காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டது.

anti caa groups given complaint against bjp

author img

By

Published : Mar 1, 2020, 4:01 PM IST

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர், டெல்லியைப் போல் சென்னையும் கலவரத்தால் பற்றி எரியும் என்று கூறிய சமூக விரோதிகளை கைது செய்யுமாறு புகாரளித்தனர்.

பின்னர் பேசிய அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி, "கடந்த 28ஆம் தேதி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தில் பாஜக சார்பில் சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டது. அப்போது, அப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் டெல்லி எரிந்ததுபோல் சென்னை எரிய வேண்டுமா என சென்னையில் வன்முறையைத் தூண்டுவது போல் கோஷங்கள் எழுப்பினர்.

லயோலா மணி பேட்டி

நாடெங்கிலும் போராட்டங்கள் நடந்தாலும் தமிழ்நாட்டில் அமைதியான முறையில் நடக்கிறது. இதனைக் குலைக்கும் விதமாக வேறு மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சமூக விரோதிகளால் இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளனர். அவர்களைக் கண்டுபிடித்து கைதுசெய்ய வேண்டும் என ஆணையருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு - விஎச்பி கடும் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.