ETV Bharat / state

இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு? - சென்னையில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு

சென்னையில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு
இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்வு
author img

By

Published : Apr 13, 2022, 8:26 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மேலும், சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. இதன்படி, சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிக்கையில், "ஒவ்வொரு ஆண்டும் தற்போது உள்ள அடிப்படை தெருக் கட்டணம் 6 விழுக்காடு அல்லது ஐந்து ஆண்டுகள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம், இவற்றில் எது அதிகமாக உள்ளதோ அதன் அடிப்படையில் உயர்த்தப்படும்.

இவ்வாறு உயர்த்தப்படும் அனைத்தும், தற்போது மற்றும் புதிய மதிப்பீடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அறிவிப்பு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் எழுத்து மூலம் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை-600003 என்ற முகவரிக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தெருக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டே சொத்து வரியை சென்னை மாநகராட்சி நிர்ணயித்து வரும் நிலையில், ஒவ்வோரு ஆண்டும் தெருக் கட்டணம் உயர்த்தப்பட்டால், சொத்து வரியும் தாமாக உயரும் என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர் தான்.. மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன - ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.