ETV Bharat / state

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வேன்.. முற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் - அண்ணாமலை மோதல்! - Annamalai Vs Mano Thangaraj

Annamalai Vs Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜ் வீரம் பேசுவது நகைச்சுவை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆவின் பால் விவகாரத்தில் அண்ணாமலை, மனோ தங்கராஜ் இடையே கருத்து மோதல் ஏறபட்டு சமூக வலைத்தளத்தில் மோதிக் கொண்டு வருகின்றனர்.

சமூக வலைதளத்தில் மோதிக்கொள்ளும் அண்ணாமலை vs அமைச்சர் மனோஜ் தங்கராஜ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 11:27 AM IST

சென்னை: ஆவின் பால் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்திவிட்டு, ஊதா நிற டிலைட் பால் பாக்கெட்டை விற்பனை செய்ய முடிவெடுத்த நிலையில், இதற்கு அண்ணாமலை கண்டனத்தை தெரிவித்து, குழந்தைகளின் வளர்ச்சியில் திமுக அரசு விளையாடுகிறது என்றும், தரமற்ற பாலை கொடுத்து திமுக அரசு ஊழல் செய்கிறது என தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

  • கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம் போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு @Manothangaraj. நீதிமன்றத்தில் இந்தக் கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது… https://t.co/s5LHF1Tnr9 pic.twitter.com/2xHkpHVDow

    — K.Annamalai (@annamalai_k) November 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், அண்ணமலையின் பதிவு குறித்து அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கமளிந்திருந்தார். இதற்கு அண்ணாமலை தனது X தளத்தில், “இன்றைய உங்கள் (அமைச்சர் மனோ தங்கராஜ்) செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று, ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள்.

உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை பொது வெளியில் வெளியிட வேண்டும். உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் அமைச்சராக தொடர்வது தமிழக மக்களுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் பெரும் சாபக்கேடு” என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் மனோ தங்கராஜ், “ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையைதான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த வடநாட்டுக்கூலி அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும். மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா?

48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது. இது தமிழ்நாட்டு மக்கள் மற்றும் பால் உற்பத்தியளர்களின் நலன் சார்ந்தது. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல, பெரியாரின் பேரன்கள், கருணாநிதியின் உடன்பிறப்புகள், தளபதியின் (முதலமைச்சர் ஸ்டாலின்) தம்பிகள், தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பவர்கள்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் மனோ தங்கராஜின் பதிவிற்கு மீண்டும் அண்ணாமலை தனது X தளத்தில், “கூறிய அவதூறுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், வழக்கம்போல, நான் அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் கூறிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

நீதிமன்றத்தில் இந்த கதை எல்லாம் செல்லாது என்பதை, பல நீதிமன்றங்களில் மன்னிப்பு கேட்ட வரலாறு உள்ள அவரது உடன்பிறப்பிடமோ, அண்ணனிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். ஏற்கனவே, பிரதமர் மோடியை மிகவும் தரம் தாழ்ந்த முறையில் விமர்சித்து விட்டு, பின்னர் பொதுமக்கள் எதிர்ப்புக்கு பயந்து பதிவை நீக்கியது போல, அவதூறு வழக்குக்கு பயந்து, கீழ்க்கண்ட இந்த பதிவை நீக்கிய கோழை நீங்கள், வீரம் பேசுவது நகைச்சுவை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டைப் பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன். அந்த ஒரு கோடி ரூபாய் பணம், ஆவின் நிறுவனத்திற்கு பால் கொடுக்கும் நமது தமிழக விவசாயிகளின் மேம்பாட்டு நிதியாக ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும். உங்களைப் போன்ற ஒரு அமைச்சர் தமிழகத்தின் சாபக்கேடு” என பதிவிட்டார்.

இதையும் படிங்க: ரேசிங் சர்க்யூட் ஃபார்முலா 4; முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.