பாஜகவின் மாநில துணைத் தலைவராக, முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாக, கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜகவின் மாநில தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பணிகள் சிறக்க வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார். அண்மையில் டெல்லி சென்று பாஜகவில் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை, தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் தேர்வை கைவிடக்கோரி தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் கடிதம்!