ETV Bharat / state

ஈவேராவை ‘பெரியார்’ ஆக்கிய அன்னை மீனாம்பாள்! - Annai Meenambal Sivaraj

தந்தை பெரியார் என தமிழ்நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஈ.வே. ராமசாமிக்கு ‘பெரியார்’ என்று பெயர் சூட்டிய அன்னை மீனாம்பாள் பிறந்ததினம் இன்று. அவரைப் பற்றிய தொகுப்பு...

Annai Meenambal Sivaraj
Annai Meenambal Sivaraj
author img

By

Published : Dec 26, 2019, 2:54 PM IST

காலனியாதிக்க இந்தியாவில் சாதியக் கொடுமையை சகிக்க முடியாமல் ரங்கூனுக்கு (பர்மா) சென்றது மீனாம்பாள் குடும்பம், அவர் அங்குதான் பிறந்தார். இவர் ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல்கொடுத்த போராளி மதுரைப் பிள்ளையின் பேத்தி, மீனாம்பாளின் தந்தையும் ஆதி திராவிட இயக்கங்களுக்காக செயல்பட்டவர். அதனால் இயல்பிலேயே மீனாம்பாளிடம் போராட்ட குணம் நிறைந்திருந்தது. ஒடுக்கப்படும் மக்களின் வாழ்வியல், அவர்களின் போராட்டம் குறித்த புரிதல் அவரிடம் இருந்தது.

இளங்கலை படிப்பை ரங்கூனில் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய மீனாம்பாள், மனதில் சாதி எதிர்ப்பு போராட்டத் தீ பற்றிக் கொண்டது. இந்திய மண்ணில் நிலவும் சாதிய கொடுமைகளை எதிர்த்து போராடவும், சாதிய கட்டமைப்பை தகர்க்கவும் பெண்களை அழைத்தார். ஒடுக்கப்படும் பெண்களுக்கு அரசியல் புரிதலை ஏற்படுத்தினார்.

சாதி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த மீனாம்பாள், உயர்சாதியினர் என தங்களை கருதிக்கொள்வோர் பெரிதும் எதிர்த்த சைமன் குழுவுக்கு ஆதரவு தெரிவித்தார். சைமன் குழுவிடம் ஒடுக்கப்படும் மக்களுக்கான உரிமைகளை வழங்க கேட்டுக்கொண்டார். அதற்கடுத்த சில ஆண்டுகளில் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியாருடன் இணைந்துகொண்டார்.

அம்பேத்கர் - பெரியார்
அம்பேத்கர் - பெரியார்

1937ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற ஆதி திராவிடர்கள் மாநாட்டில் பேசிய அன்னை மீனாம்பாள், ஒற்றுமையில்லாத குடும்பம் அழிந்துபோகும் என்பார்கள். ஒரு சமூகமோ, தேசமோ முன்னேற்றம் காண ஒற்றுமையின் பலம் அவசியமானது. சாதியக் கொடுமை இந்த இந்திய மண்ணைவிட்டு அகல நீண்டகாலமாகும், அதனால் நம் சமுதாய மக்களை ஒன்றிணைய வேண்டும். நம் ஒற்றுமையின் பலம் என்ன என்பதையும், நாமும் மனிதர்கள்தான் என்பதையும் சாதிவெறி சமூகத்துக்கு காட்ட வேண்டும் என்றார்.

அன்னை மீனாம்பாள் - அண்ணல் அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கர்

மீனாம்பாளின் போராட்ட குணத்தைக் கண்ட அம்பேத்கர், அவரை உரிமையோடு தங்கை என்றே அழைக்கத் தொடங்கினார். அனைத்திந்திய பட்டியலின மக்கள் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் பெண்மணி அன்னை மீனாம்பாள்தான்... சென்னையின் துணை மேயராகவும் இருந்திருக்கிறார். தலித் மக்கள் விடுதலைக்காகவும், சாதியக் கொடுமையை எதிர்த்தும் தன் வாழ்நாள் எல்லாம் போராடினார்.

பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தை பெரிதும் ஆதரித்த அன்னை மீனாம்பாளை கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த பெண்ணியவாதி என்று சொன்னால் மிகையாகது. சாதி, ஒடுக்குமுறை, தீண்டாமைக் கொடுமை போன்ற சமூக நோய்களை எதிர்த்து பெண்கள் கல்வியின் வாயிலாகப் போராட வேண்டும் என வலியுறுத்தினார்.

அம்பேத்கர் குழுவினருடன் அன்னை மீனாம்பாள்

சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாடு ஒன்றில், ஈ. வே. ராமசாமி என அழைக்கப்பட்ட பகுத்தறிவு பகலவனுக்கு ‘பெரியார்’ (மிக உயர்ந்தவர்) என்ற பெயர் சூட்டினார் அன்னை மீனாம்பாள். பட்டியலினத்தில் பிறந்த காரணத்துக்காகவே இங்கு மறைக்கப்படும் தலைவர்கள் ஏராளம், அப்படியானவர்களில் நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய பெண்மணி அன்னை மீனாம்பாள்.

இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 50 கச்சேரிகள் - திராவிடத்தைப் பரப்பிய காந்தக் குரலோன் ஹனிபா!

Intro:Body:

Annai Meenambal Sivaraj: The Tamil Dalit Woman Leader | #IndianWomenInHistory

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.