ETV Bharat / state

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு "CEETA" எனும் தனி நுழைவுத்தேர்வு - அண்ணா பல்கலை., அறிவிப்பு! - சீட்டா தேர்வு

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு டான்செட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், இனி CEETA-PG என்ற தனியான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Anna
Anna
author img

By

Published : Jan 29, 2023, 5:48 PM IST

சென்னை: எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க் உள்ளிட்ட முதுகலைப் படிப்புகளுக்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு (TANCET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதுகலைப் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு CEETA-PG (Common Engineering Entrance Test and Admission) என்ற தனி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகள் கலை அறிவியல் பாடப்பிரிவின்கீழ் வருவதால் அவற்றிற்கு தனியாக நுழைவுத்தேர்வும், முதுகலைப் பொறியியல் படிப்புகளுக்கு தனியாக நுழைவுத்தேர்வும் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை ஜூன், ஜூலை மாதங்களில் முடிவடையும். அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி, தனியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க, செப்டம்பர் மாதம் வரை ஆகிறது. இந்த காலதாமதத்தால் முதுகலை பொறியியல் படிப்புகளில் ஏராளமான காலியிடங்கள் ஏற்படுகின்றன.

இதனைத்தவிர்க்க வரும் கல்வி ஆண்டில் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஜூன் மாதத்திற்குள் முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக முதன்முறையாக நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் போதே, கலந்தாய்விற்கும் சேர்த்து விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் நுழைவுத் தேர்வு மற்றும் கலந்தாய்வு இரண்டிற்கும் தனித்தனியாக விண்ணப்பிப்பதால் ஏற்படும் காலதாமதம் குறைவதுடன், மாணவர் சேர்க்கை விரைவாக நடத்தி முடிக்கப்படும் எனவும், அண்ணா பல்கலைக் கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை முன்கூட்டியே நடத்தினால் காலியிடங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் எனவும் அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, முதுகலைப் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு CEETA-PG (Common Engineering Entrance Test and Admission) என்ற தனி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'நடைபயிற்சி செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும்' - குழந்தைகள் உரிமை ஆர்வலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.