சென்னை: கரோனா தொற்று காரணமாகப் பொறியியல் படிப்புகளுக்கான 2020ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் பருவத் தேர்வுகள், 2021ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. அதன் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியானது.
அதில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சிப்பெறவில்லை. மேலும், அந்தத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததை தாெடர்ந்து மறுதேர்வு நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மறுத்தேர்வு நடத்தப்படும் கால அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதில், ஏற்கனவே கட்டணம் செலுத்திய மாணவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும், புதிதாக தேர்வு எழுது விரும்பும் மாணவர்கள் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதலாம் என அறிவித்தார்.
அதன்படி இளநிலைப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்று (ஜூன் 21) தொடங்கியது. இத்தேர்வு ஜூலை 28 ஆம் தேதி வரை நடைப்பெறும். மேலும் முதுகலைப் படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 20 ஆம் தேதி வரை நடைப்பெறவுள்ளன.
இதையும் படிங்க: ஒரு மாதத்திற்குப் பின்னர் பேருந்து சேவை தொடக்கம்