ETV Bharat / state

ஆண்டிமடம் காவல் நிலையம் தாக்கப்பட்ட வழக்கு - குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை!

சென்னை: ஆண்டிமடம் காவல் நிலையம் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Andimadam police station attack case
Andimadam police station attack case
author img

By

Published : Nov 29, 2019, 11:56 PM IST

1997ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் காவல் நிலையத்தை தமிழர் விடுதலை படையைச் சேர்ந்தவர்கள் பைப் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், வீச்சறுவாள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். அங்கிருந்த போலீசாரை அறையில் அடைத்து விட்டு, காவல் நிலையத்தில் இருந்த 5 பெரிய துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், தொலை தொடர்பு கருவிகள், போலீஸ் உடைகள், தோட்டாக்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழர் விடுதலை படையை சேர்ந்த சுந்தரம், வெங்கடேசன், ரவிச்சந்திரன், முருகையன், சுந்தரமூர்த்தி, ஜெயச்சந்திரன், சேகர், சரவணன், நாகராஜன், செங்குட்டுவன் என்கிற மாறன், ஜான் பீட்டர், உத்திரபதி, பொன்னிவளவன், நடராஜன், வீரையா ஆகியோரை கைது செய்த பெரம்பலூர் கியூ பிரிவு போலீசார், பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மேற்படி நபர்கள் மீது 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அரசு சார்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் விஜயராஜ், அரசு தரப்பில் 72 சாட்சிகள் விசாரித்தார். 101 ஆவணங்களும், 67 சான்று பொருட்களும் குறியீடு செய்யப்பட்டன. வழக்கு நடைபெற்ற காலத்தில் வீரையா என்பவர் அப்ரூவர் ஆகிவிட்டார். சுந்தரம், சரவணன், உத்திரபதி ஆகிய 3 பேர்கள் இறந்துவிட்டனர்.

மீதமுள்ள 11 குற்றவாளிகள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டி இன்று தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளதால் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Intro:Body:ஆண்டிமடம் காவல் நிலையம் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி வெடிகுண்டுகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1997 ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் காவல் நிலையத்தை தமிழர் விடுதலை படையை சேர்ந்தவர்கள் பைப் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், வீச்சறுவாள் உள்ளட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.

அங்கிருந்த போலீசாரை அறையில் அடைத்து விட்டு, காவல் நிலையத்தில் இருந்த 5 பெரிய துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், தொலை தொடர்பு கருவிகள், போலீஸ் உடைகள், தோட்டாக்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழர் விடுதலை படையை சேர்ந்த சுந்தரம், வெங்கடேசன், ரவிச்சந்திரன், முருகையன், சுந்தரமூர்த்தி, ஜெயச்சந்திரன், சேகர், சரவணன,நாகராஜன், செங்குட்டுவன் என்கிற மாறன், ஜான் பீட்டர், உத்திரபதி, பொன்னிவளவன், நடராஜன், வீரையா ஆகியோரை கைது செய்த
பெரம்பலூர் கியூ பிரிவு போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மேற்படி எதிரிகள் மீது 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்கு சிறப்பு நீதிமன்றதில் நடைபெற்று வந்தது.

அரசு சார்பில் ஆஜரான சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் விஜயராஜ், அரசு தரப்பில் 72 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 101 ஆவணங்களும், 67 சான்று பொருட்களும் குறியீடு செய்யப்பட்டன.

வழக்கு நடைபெற்ற காலத்தில் வீரையா என்பவர் அப்ரூவர் ஆகிவிட்டார். சுந்தரம், சரவணன், உத்திரபதி ஆகிய 3 பேர்கள் இறந்து விட்டனர்.

மீதம் உள்ள 11 பேர்கள் குற்றவாளிகள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டி இன்று தீர்ப்பு வழங்கினார்.

அரசு தரப்பில் அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளதால் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.