ETV Bharat / state

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்... - திமுக தேர்தல் வாக்குறுதி

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி, குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

anbumani
anbumani
author img

By

Published : Aug 22, 2022, 9:44 PM IST

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், அம்மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதேபோல் தமிழ்நாட்டில் திமுக அரசு, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "புதுச்சேரியில் 21 வயது முதல் 57 வயது வரையிலான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

21 வயதுக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மட்டும்தான் உதவித்தொகை என அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்வது குறையும். அந்த வகையில் இத்திட்டம் மகளிர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும்.

தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. புதிய அரசு பதவியேற்று இரு நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது மகளிர் உரிமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இந்த விவகாரத்தில் இனியும் தாமதம் செய்யாமல் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:’இன்னும் நிறைய சம்பவங்கள் காத்திருக்கு..!’ - முதலமைச்சர் அதிரடி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.