ETV Bharat / state

அதிவிரைவு ரயிலாக மாறிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ்.. அக்.1 முதல் நேரம் மாற்றம்.. தென்மாவட்ட ரயில் பயணிகள் ஹேப்பி!

Ananthapuri Express: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Ananthapuri Express will converted into a Super fast Express Railway Board announced
அனந்தபுரி விரைவு ரயில் இனி அதிவிரைவு ரயில்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 4:47 PM IST

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, நாளொன்றுக்கு சுமார் 130 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் முக்கியமாக, சென்னை எழும்பூரில் இருந்து, தென் மாவட்டங்களான, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில், கன்னியக்குமரி ஆகிய மாவட்டங்களுக்கு விழுப்புரம், திருச்சி வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

  • Train No. 16823/16824 Chennai Egmore – Kollam - Chennai Egmore Anantapuri Express will be converted into Superfast Express and renumbered as Train No. 20635/20636 Chennai Egmore - Kollam – Chennai Egmore Anantapuri Superfast Express with effect from 01st October 2023 pic.twitter.com/MHawUSXQWu

    — Southern Railway (@GMSRailway) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேப்போல், கடலூர், மயிலாடுதுறை வழியாக தஞ்சைக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்கள் வழியாக கேரளாவிற்கும் ரயில்கள் இயக்கபடுகின்றன. அதில் முக்கிய ரயிலாக இருப்பது சென்னை - கொல்லம் இடையே திருவந்தபுரம் வழியாக இயக்கப்படும் அனந்தபுரி (16823 - 16824) விரைவு ரயில் உள்ளது.

இந்த ரயில் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயிலாக மாற்றப்படவுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதையடுத்து இதன் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரிலிருந்து 20 நிமிடம் முன்னதாக அதாவது, இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு கொல்லத்துக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக கொல்லத்திலிருந்து 50 நிமிடம் முன்னதாக அதாவது, பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சென்னை - கொல்லம் இடையே இயக்கப்படும் ரயில் திருச்சிக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 1.05 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 3.50 மணிக்கு பதிலாக அதிகாலை 3.20 மணிக்கும், திருநெல்வேலிக்கு காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 6.05 மணிக்கும் வந்தடையும்.

இதுபோல் கொல்லத்திலிருந்து புறப்படும் ரயில் திருநெல்வேலிக்கு இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கும், மதுரைக்கு இரவு 11.15 மணிக்கு பதிலாக 9.50 மணிக்கும், திருச்சிக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.15 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 6.13 மணிக்கு பதிலாக அதிகாலை 4.43 மணிக்கும், தாம்பரத்துக்கு காலை 6.43 மணிக்கு பதிலாக அதிகாலை 5.13 மணிக்கும் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை - திருப்பதி இடையே 6 ரயில்கள் 15 நாட்களுக்கு ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்புக்கான காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.