சென்னை: சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. சென்னை தீவுத்திடலில் 70 நாட்களுக்கு நடத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் அரசுத்துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனம், பிற மாநில அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெறும்.
புதிய திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரசுத்துறை அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. பொருட்காட்சியில் இடம் பெற உள்ள ஸ்டால்கள், கடைகள் போன்றவற்றிற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வடகிழக்கு பருவமழையின் பிடியில் சிக்கிய வடசென்னை