ETV Bharat / state

‘காடுகள் சட்டம் 2023 அவசியமற்றது இதனை பாமக எதிற்கும்’ - அன்புமணி ராமதாஸ்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காடுகள் சட்டம் 2023 அவசியமற்றது எனவும் பாட்டாளி மக்கள் கட்சி அதனை எதிர்க்கும் எனவும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காடுகள் சட்டம் 2023 - பாமக எதிர்க்கும்: அன்புமணி

author img

By

Published : Jul 24, 2023, 8:10 PM IST

சென்னை: பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று (ஜூலை 24) விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் ஜி20 நாடுகள் மாநாடு மற்றும் COP 28 ஐநா காலநிலை மாநாட்டில் உறுதியான காலநிலை நடவடிக்கை கோரி இந்த விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.

புகை படிம எரிபொருளில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் எந்த ஒரு அமைப்போ அல்லது கட்சியோ இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவில்லை என்பது வருத்தமாக உள்ளதாக விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் குறித்து பேசிய அவர், “நமக்கு உள்ள பிரச்சினைகள் சிறிய சிறிய பிரச்சினைகள்தான், ஆனால் காலநிலை பிரச்சினை மிக பெரிய பிரச்சனை, அது தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும், அரசாங்கமும் அமைதியாக உள்ளது. உங்களுக்கு கோபம் வரவில்லையா, பயம் வரவில்லையா”என மக்களிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனை தொடர்ந்து “மற்ற நாடுகளில் நடப்பது போன்று இயற்கை சீற்றம் இங்கும் வர உள்ளது. ஜூலை மாதம் உலக வரலாற்றில் அதிக வெப்பமான மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போதாவது பயம் வரவில்லையா? என்ற அவர், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் காட்டுத்தீ பரவியுள்ளது, இதனால் அந்த நாடுகள் தங்கள் விமாணங்களை ஐரோப்பிய நாட்டில் நிறுத்தி வைத்துள்ளது. அத்தனை தூரம் தாக்கம் உள்ளது” என்றார்.

“கடுமையான வறட்சி, பெரும் மழை, சூப்பர் புயல் ஆகிய இயற்க்கை சீற்றங்கள் வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் முன்னேறி கொண்டிருக்கும் இந்திய நாடு பெரிதும் பாதிக்கப்படும். இயந்திர நாடுகளான மேற்கத்திய நாடுகள் புகை படிம எரிபொருளை எரித்து அவர்கள் உயர்ந்துவிட்டனர். மேலும் உலக வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்த நிலையில்தான் இத்தனை பாதிப்பு. இது பற்றி இந்திய அரசுக்கு எந்த கவலையும் இல்லை” என குற்றம் சாட்டினார்.

சென்னை மற்றும் டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் நாடுகளின் தலைவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்து அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றதாக அவர் கூறினார்.

கடும் மழை மற்றும் வெப்பத்தால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்காணோர் உயிரிழந்து வருவதாகவும், 150 ஆண்டுகளுக்கு முன்னர் 14 டிகிரி சென்ட்டி கிரேட்டாக இருந்த காலநிலை அளவு, தற்போது 15.2 டிகிரி சென்டி கிரேட்டாக அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஜூலை மாதத்தில் 17.1 டிகிரியாக அதிகரித்திருக்கிறது, காலநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் முடிவு எடுக்காததற்கு சுயநலம் தான் காரணம் என கூறீய அவர், அமெரிக்கா, சீனா, இந்திய நாடுகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ளது. தற்போது இந்தியா, சுற்றுச்சூழல் பாதிப்பில் முதலிடத்தில் வந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், “ஊடகங்கள் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மின்சார 36 ஆயிரம் மெகாவாட் இன்னும் 7 ஆண்டுகளில் 40 ஆயிரம் ஆக உயரும். என்எல்சிக்கு நிலம் கொடுக்க மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருப்பதிலேயே மோசமான நிறுவனம் என்எல்சி தான். 4 மாவட்டங்களை அளித்துள்ளது. பழுப்பு நிலக்கரி எடுத்து எரித்து காற்றையும் மாசு படுத்தி குறைவான மின்சாரம் கொடுக்கிறார்கள்” என குற்றம் சாட்டினார்.

“சென்னையில் மட்டும் சுற்றுச்சூழலால் 4000 பேர் பாதிக்கப்படுகின்றனர். 3 லட்சம் பேர் வாழும் மாலத்தீவுகள் காணாமல் போகும் நிலை இருக்கிறது. இன்னும் 17 ஆண்டுகளில் பூஜ்ய எமிசன் தமிழ்நாடு என்பது நடக்குமா என எனக்கு நம்பிக்கை இல்லை. அறிவிப்பு மட்டும் போதாது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காடுகள் சட்டம் 2023 அவசியமற்றது. பாமக அதனை எதிர்க்கும்” என தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, முன்னால் மத்திய அமைச்சர் ஏ கே மூர்த்தி உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ''தருமபுரியில் விதைத்தால் அது தமிழ்நாடு முழுவதும் முளைக்கும்'' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.