சென்னை:தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியாகி வருகிறது. இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 19 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
138 நகராட்சிகளில் 2 நகராட்சி வார்டில் அமமுக வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகராட்சி 3வது வார்டில் அமமுக சார்பாக போட்டியிட்ட கருப்பசாமி வெற்றி பெற்றுள்ளார். மேலும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 4வது வார்டில் அமமுக சார்பில் போட்டியிட்ட விக்னேஸ்வரி வெற்றி பெற்றுள்ளார்.
பேரூராட்சியில் வெற்றி
தமிழ்நாடு முழுவதும் உள்ள 490 பேரூராட்சிகளில் 11 பேரூராட்சி வார்டு இடங்களை அமமுக கைப்பற்றியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு பேரூராட்சியின் 9 வார்டுகளில் அமமுக வென்றுள்ளது. தென்காசி மாவட்டங்களில் 3 பேரூராட்சியிலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனையடுத்து மதுரை எழுமலை பேரூராட்சியில் ஒரு வார்டிலும், வேலூர் மாவட்டம் பன்னிகொண்டான் பேரூராட்சியில் ஒரு வார்டு என மொத்தமாக 11 பேரூராட்சியில் அமமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர்.
ஒரத்தநாட்டை கைப்பற்றிய அமமுக
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியின் 15 வார்டுகளில் அமமுக 9 வார்டுகளை கைப்பற்றியது.
இதையும் படிங்க:வாக்குப்பெட்டி வைக்கப்பட்ட அறையின் சாவி மாயம் - பரபரப்பு